
நடிகைகளின் முகத்தை ஆபாசமான முறையில் எடிட் செய்து வீடியோ வெளியிட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அந்த வகையில், நடிகைகள் ராஷ்மிகா மந்தனா, சிம்ரன், அலியா பட் மற்றும் கத்ரீனா கைஃப் போன்றோரின் டீப் ஃபேக் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலானது.
இதற்கு திரைபிரபலங்கள் பலரும் கண்டனம் தெரிவித்தனர். இதனால் பெரும் சர்ச்சை ஏற்பட்டது. இந்நிலையில், பாலிவுட் நடிகையான பிரியங்கா சோப்ராவின் டீப் பேக் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. அவரின் குரலை மட்டும் எடிட் செய்திருக்கிறார்கள். அதாவது போலியான நிறுவனம் ஒன்றிற்கு அவர் விளம்பரம் செய்வது போன்று பேசப்பட்டிருக்கிறது.
மேலும் அவர் தான் வாங்கும் சம்பளம் குறித்தும் கூறுவது போன்றும் அந்த வீடியோவை எடிட் செய்திருக்கிறார்கள். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி கொண்டிருக்கிறது.