‘சாக்லேட் டே’ வை கொண்டாடும் ஒரு சாக்லேட்… நடிகை ரகுல் ப்ரீத் சிங் வெளியிட்ட அழகிய புகைப்படங்கள்… வர்ணித்து உருகும் ரசிகர்கள்…

இந்திய திரை உலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை ரகுல் ப்ரீத் சிங். இவர் தன்னுடைய அழகாலும் கவர்ச்சியாலும் சிறகடித்து பறந்து கொண்டிருக்கிறார்.

   

தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி போன்ற பல மொழிகளில் தன்னுடைய திறமையான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தை பிடித்துள்ளார் .

அதைப்போலவே கவர்ச்சி காட்டுவதிலும் பல கவர்ச்சி நடிகைகளுக்கு இவர் டஃப் கொடுத்து வருகின்றார். கிட்டத்தட்ட 30 வயதை கடந்து இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல்  இருக்கும் இவர் சமீபத்தில் தனது காதலர் ஜக்கியை அனைவருக்கும் அறிமுகம் செய்து வைத்தார்.

சமூக வலைத்தளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்க கூடியவர் நடிகை ரகுல் ப்ரீத் சிங். இவர் அடிக்கடி தனது ஹாட் புகைப்படங்களையும், வீடியோக்களையும் இணையத்தில் பகிர்ந்து ரசிகர்களை சூடேற்றி வருகிறார்.

அந்தவகையில் தற்பொழுது இவர் உலக சாக்லேட் தினத்தை சாக்லேட் உடன் கொண்டாடிய அழகிய புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்துள்ளார். இப்புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் ”சாக்லேட் டே’ வை கொண்டாடும் ஒரு சாக்லேட்’ என்று வர்ணித்து வருகின்றனர்.