நடிகை ரோஜா வீட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை ரம்யா கிருஷ்ணன்… வைரலாகும் புகைப்படங்கள்…

தமிழ் சினிமாவின் மிகவும் பிரபலமான முன்னணி நடிகைகளில் ஒருவர்  நடிகை ரோஜா. இவர் . ஆந்திர பிரதேசத்தை பூர்வீகமாகக் கொண்டவர். இவர் தந்தை நாகராஜா ரெட்டி தாய் லலிதா. திருப்பதியில் உள்ள  திருப்பதியில் உள்ள ஸ்ரீ பத்மாவதி மகளிர் பல்கலைக்கழகத்தில் Political Science இளங்கலைப் பட்டம் பெற்றார்.

   

இவர் சினிமாவில் நுழைவதற்கு முன்பாக குச்சிப்புடி கற்று நடனம் ஆட கூடியவராக இருந்தார். நடிகை ரோஜா தெலுங்கில் வெளியான ‘பிரேமா தபசு’ என்ற படத்தில் மூலமாக திரையுலகில் அறிமுகமானார். அதை தொடர்ந்து இவர் நடிகர் பிரசாந்துடன் இணைந்து ஆர்.கே செல்வமணி இயக்கத்தில் வெளியான ‘செம்பருத்தி’ படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.

இதை தொடர்ந்து  சூரியன்,  உழைப்பாளி,  வீர,  அசுரன்,  மக்களாட்சி,  பரம்பரை,  சின்ன துரை, நெஞ்சினிலே,  ஊட்டி,  திருநெல்வேலி போன்ற பல படங்களில்  நடித்துள்ளார்.இவர்  தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு,  கன்னடம்,  மலையாளம் போன்ற மொழி திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார். தொலைக்காட்சியில்  நீதிபதியாக, தொகுப்பாளராக  பணியாற்றியுள்ளார்.

நடிகை ரோஜா  இயக்குனர் செல்வமணி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.  சினிமாவில் இருந்து நடிகை ரோஜா அரசியலில் களம் இறங்கினார் அரசியலில் கடுமையாக உழைத்து தொண்டரிலிருந்து எம்.எல்.ஏ வேட்பாளராக  தேர்ந்தெடுக்கப்பட்டார்.

எம்.எல்.ஏ  வாக வெற்றி பெற்று  ஆந்திரா சுற்றுலாத்துறை அமைச்சராக நடிகை ரோஜா பணியாற்றி வருகிறார். தற்போது நடிகர் ரோஜா வீட்டின் மாங்கல்ய பூஜை நடைபெற்றது அதில் நடிகை ரம்யா கிருஷ்ணன் கலந்து கொண்டார். இந்த புகைப்படமானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.