குடும்பத்துடன்  சிறுவயதில் வசித்த வீட்டிற்கு திரும்பி சென்ற நடிகை கீர்த்தி சுரேஷ்… வைரலாகும் புகைப்படங்கள்… 

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் நடிகை கீர்த்தி சுரேஷ் இவர் சென்னையை பூர்வீகமாக கொண்டவர். இவர் தந்தை ஜி. சுரேஷ் குமார் இவர் ஒரு திரைப்பட தயாரிப்பாளர், தாய் மோகனா ஒரு நடிகை. நடிகை  கீர்த்தி சுரேஷ் திருவனந்தபுரத்தில்பட்டம் கேந்திரிய வித்யாலயாவில் பட்டம் பள்ளியில் பள்ளி படிப்பை முடித்தார். அதைத் தொடர்ந்துபெர்ல் அகாடாமி பேஷன் டிசைனில் பட்டப்படிப்பை முடித்தார்.

   

நடிகை கீர்த்தி சுரேஷ் தந்தை  தயாரிப்பில் வெளியான பைலட்ஸ், அச்சநேயநிக்கிஷ்டம்,  போன்ற தொலைக்காட்சியில் தொடர்கள் குழந்தை நட்சத்திரமாக தனது திரைப்பயணத்தை தொடங்கினார். அதை தொடர்ந்து  ‘விமானிகள்’  என்ற  மலையாள திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வெள்ளித்திரையில் அறிமுகமானார்.

அதை தொடர்ந்து 2015 ஆம் ஆண்டு விக்ரம் பிரபு ஜோடியாக ‘இது என்ன மாயம்’ என்ற படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகமானார். அதை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் இணைந்து வெளியான ரஜினி முருகன் திரைப்படத்தில் நடித்து மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பும் ரசிகர் பட்டாளத்தையும் உருவாக்கிக் கொண்டார்.

இது தொடர்ந்து இவர் தமிழில் ரெமோ,  பைரவா,  பாம்பு சட்டை,  தானா சேர்ந்த கூட்டம்,  சண்டக்கோழி 2 ,  பென்குயின்,  போன்ற  பல தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர்    தரசா மற்றும் மாமன்னன் போன்ற படங்கள் சமீபத்தில் நடிப்பில் வெளியான படங்கள். தற்போது கீர்த்தி சுரேஷ் சைரன்,  ரகு  தாத்தா, ரிவால்வர் ரீட்டா,  கன்னி வேதி போன்ற தமிழ் படங்களில் நடித்து வருகிறார்.

தற்போது தமிழ் சினிமாவில் உள்ள பல முன்னணி நடிகர்களுடன் கதாநாயகியாக நடித்து விட்டார். இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் நடிகை கீர்த்தி சுரேஷ் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

தற்போது  இவர் சிறுவயதில் வசித்த வீட்டினை நீண்ட வருடங்களுக்கு பிறகு மீண்டும் அங்கு குடும்பத்துடன் சென்று பழைய நினைவுகளில் நிகழ்ந்துள்ளார். தற்போது இந்த புகைப்படமானது இணையத்தில் வெளியாகிய வைரலாகி வருகிறது.