‘அழகென்றால் அவள் தானா’….. ரசிகர்களின் மனதை கொள்ளையடித்த நடிகை சாய் பல்லவியின் லேட்டஸ்ட் கியூட் புகைப்படங்கள்…

மலையாளத்தில் ‘பிரேமம்’ என்ற திரைப்படத்தில் ‘மலர் டீச்சர்’ ஆக அறிமுகமாகி திரையுலகில்  பிரபலமானவர் நடிகை சாய் பல்லவி.

   

‘பிரேமம்’ படத்தில் இவர் நடித்த மலர் கதாபாத்திரம் எத்தனையோ இளைஞர்களின் தூக்கத்தை கலைத்தது.

மலையாளத்தில் மட்டுமின்றி தமிழ் ரசிகர்களிடமும் பெரும் வரவேற்பு பெற்றது பிரேமம் திரைப்படம்.

மலர் டீச்சர் ஆக நடித்த மக்களின் மனங்களை கவர்ந்தார் நடிகை சாய் பல்லவி. இதை தொடர்ந்து 2016ல் துல்கர் சல்மானுடன் இணைந்து கலி திரைப்படம் சூப்பர் ஹிட் ஆனது.

2017 ஆம் ஆண்டு காதல் படமாக வெளியான பிடா திரைப்படம் சாய் பல்லவிக்கு தெலுங்கில் நல்ல வரவேற்பை கொடுத்தது.

தமிழில் எப்பொழுது நடிப்பார் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில், ‘கரு’ திரைப்படம் மூலம் 2018ல் தமிழில் அறிமுகமானார்.

அதே வருடத்தில் வெளியான ‘மாரி 2’ திரைப்படம் சாய்பல்லவிக்கு தமிழில் ஹிட் கொடுத்தது.

இதில் அராத்து பெண்ணாக வலம் வந்த சாய்பல்லவி தனுஷுடன் ஜோடி போட்டு ஆடிய ரவுடி பேபி பாடல் பட்டி தொட்டி எங்கும் ஹிட் அடித்தது.

நடிகை சாய் பல்லவி தற்பொழுது நடிகர் சிவகார்த்திகேயனின் மாவீரன் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

தற்பொழுது இவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களால் அதிகம் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.