கலை இயக்குனர் டி.ஆர்.கே கிரணின் குடும்பத்தை பார்த்துள்ளீர்களா?… வைரலாகும் குடும்ப புகைப்படங்கள்…

தமிழ் சினிமாவில் கலை இயக்குனராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் டி ஆர் கே கிரண். இவர் முழுமையாக தமிழ் சினிமாவில் பணியாற்றி வருகின்றார்.

   

முதலில் உதவியாளராக தன்னுடைய திரை பயணத்தை தொடங்கிய இவர் தற்போது முன்னணி கலை இயக்குனராக வலம் வருகிறார்.

1990களின் முற்பகுதியில் கலை இயக்குனராக இருந்து சீமான், குருதிப்புனல், நேருக்கு நேர் மற்றும் அலைபாயுதே உள்ளிட்ட திரைப்படங்களில் இவர் பணியாற்றினார்.

அதன் பிறகு 1998 ஆம் ஆண்டு தானே கலை இயக்குனராக தொடங்கினார். அதன்படி இவர் மயக்கம் என்ன, 3, கோ, இரண்டாம் உலகம், அனேகன், போடா போடி, நானும் ரவுடிதான் மற்றும் தானா சேர்ந்த கூட்டம் என பல திரைப்படங்களில் கலை இயக்குனராக பணியாற்றியுள்ளார்.

தற்போது இவர் விஜய் தொலைக்காட்சி, சன் டெலிவிஷன் மற்றும் ஏசியாநெட் என பல சேனல்களில் பணியாற்றி வருகின்றார்.

சர்வதேச மற்றும் தேசிய, உள்ளூர் பிராண்டுகளில் 2000க்கும் மேற்பட்ட தொலைக்காட்சி விளம்பரங்களில் அனுபவம் வாய்ந்த பின்னணி இவருக்கு உள்ளது.

அதனைத் தவிர இன்டீரியர் டிசைனிங், ஈவன்ட் டிசைனிங் போன்றவற்றை இவர் செய்து வருகின்றார்.மேலும் கலை இயக்கம் தவிர இவர் பல திரைப்படங்களில் வில்லன் கதாபாத்திரத்திலும் துணை வேடங்களிலும் நடித்து மிரட்டி உள்ளார்.

இவர் கோ, குட்டி புலி, வேலையில்லா பட்டதாரி, வேதாளம் மற்றும் திருநாள் உள்ளிட்ட பல திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

இன்று வரும் எந்த படமாக இருந்தாலும் அதில் ஏதாவது ஒரு பாத்திரத்தில் இவரை நிச்சயம் பார்த்து விட முடியும். தலை இயக்குனராக அறிமுகமாகி இன்றும் அந்த துறையில் தனித்திருந்தாலும் இடையிடையே நடிப்பிலும் அசத்தி கொண்டிருக்கிறார்.

இயக்குனர் கனவோடு வந்து ஆர்ட் டைரக்டர் ஆனார். இதனிடையே இவர் உமாராணி என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் இவருக்கு பிரணவ், தருண் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர்.

இந்நிலையில் கலை இயக்குநர் கிரண் அவர்களின் குடும்ப புகைப்படங்கள் சில இணையத்தில் வைரலாகி வருகிறது.