அக்கா இருக்கும்போதே தங்கைக்கு நிச்சயதார்த்தம்… துளியும் வருத்தமில்லாம… குத்தாட்டம் போட்ட சாய்பல்லவி…!

நடிகை சாய் பல்லவி பிரேமம் திரைப்படத்தின் மூலம் ரசிகர் மனங்களில் நீங்கா இடத்தை பிடித்து விட்டார். இளைஞர்களின் கதவு கன்னியாக வலம் வந்து கொண்டிருக்கும் அவர் கவர்ச்சி கதாபாத்திரங்களில் நடிக்காமல் கதைக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்துக் கொண்டிருக்கிறார்.

   

வசீகரிக்கும் அவரின் முகம், நடிப்பு மற்றும் நடனம் என்று அனைத்துமே ரசிகர்களை கட்டி போட்டு இருக்கிறது. சாய்பல்லவி சாயலை அப்படியே கொண்டிருக்கும் அவரின் சகோதரியின் புகைப்படம் மற்றும் வீடியோக்களும் இணையதளங்களில் வைரலாகிவிடும். இருவரும் சேர்ந்து இருக்கும் புகைப்படங்களை பார்க்கும் ரசிகர்கள் இதில் எது சாய்பல்லவி? என்று கேட்பார்கள்.

இந்நிலையில் சாய்பல்லவியின் சகோதரிக்கு நிச்சயதார்த்தம் நடந்து முடிந்திருக்கிறது. உறவினர்கள் மற்றும் நண்பர்களோடு சேர்ந்து சாய்பல்லவியும் அவரின் சகோதரியும்  குத்தாட்டம் போடும் வீடியோ இணையதளங்களில் வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது.