தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் நடிகை சமந்தா. இவர் சென்னையை பூர்வீகமாகக் கொண்டவர்.தி.நகரில் உள்ள ஹோலி ஏஞ்சல்ஸ் ஆங்கிலோ – இந்திய மேல்நிலைப்பள்ளியில் பள்ளி படிப்பை முடித்தார்.
ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் Commerce இளங்கலைப் பட்டம் பெற்றார்.இவர் கல்லூரியில் படிக்கும் போதே நாயுடு ஹாலில் விளம்பரகளில்நடிகையாக நடித்தார்.கௌதம் மேனன் இயக்கத்தில் 2010 ஆம் ஆண்டு வெளியான ‘ஏ மாய சேசாவே’ என்ற படத்தின் மூலமாக தெலுங்கு திரையுலகில் அறிமுகமானார் .
இதன் பிறகு தமிழில் 2010 ஆம் ஆண்டு வெளியான ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ என்ற படத்தில் சிறிய கதாபத்ரதில் நடித்த மக்கள் மத்தியில் அறியப்பட்டார்.பாணா காத்தாடி’ திரைப்படத்தில் நடித்து மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்று தனக்கான ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார்.
இவர் தமிழில் தெறி, 24 ,10 எண்றதுக்குள்ள, தங்க மகன், கத்தி, நீ தானே என் பொன்வசந்தம், நான் ஈ போன்ற பல படங்களில் நடித்துள்ளார். சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருக்கக் கூடியவர் அடிக்கடி
புகைப்படம் மற்றும் வீடியோவை வெளியீடுவதை வழக்கமாக வைத்துள்ளார். தற்போது இவர் ஈஷா யோகா மையத்தில் சுவாமி தரிசனம் செய்துள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.