‘எனக்கு ஹிந்தி தெரியாது டா… தமிழ்ல சொல்லிட்டு தள்ளி விடுங்கடா’… பாலி தீவில் அந்தரத்தில் தொங்கும் அனிதா சம்பத்… வைரலாகும் வீடியோ…

மக்கள் சமூக வலைத்தளங்களை அதிகம் பயன்படுத்தும் காரணத்தினால் அடிக்கடி யாராவது ஒருவர் இணையத்தில் திடீர் பிரபலமாவது உண்டு. அப்படி இணையத்தில் அதிகம் பேசப்பட்டவர்தான் சன் டிவி செய்தி வாசிப்பாளர் அனிதா சம்பத். அதற்கு முன்பு அவர் வேறொரு செய்தி தொலைக்காட்சியில் பணியாற்றி வந்தாலும் சன் டிவி வந்த பிறகு தான் இவர் திடீர் வைரலானார்.

   

செய்தி வாசிப்பாளராக தன்னுடைய பயணத்தை தொடங்கிய அனிதா சம்பத் திரைப்படங்களிலும் செய்தி வாசிப்பாளராகவே நடித்திருந்தார். இதன் மூலம் ஏற்பட்ட பிரபலம் காரணமாக அவர் பிக் பாஸ் போட்டியில் கலந்து கொண்டார். பிக் பாஸ் இவருக்கு ஒரு நல்ல திருப்புமுனையாக அமைந்தது.

பிக் பாஸ் வீட்டில் வாயை வைத்துக் கொண்டு சும்மா இல்லாமல் சில பேச தகாத வார்த்தைகளை கூறி தன்னுடைய பெயரை கெடுத்துக் கொண்டார். பிக் பாஸில் கிடைத்த பிரபலத்தைக் கொண்டு இவருக்கு திரைப்படங்களிலும் நடிக்க ஏராளமான வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கிறது. தற்பொழுது இவர் youtube சேனல் ஒன்றையும் தொடங்கி நடத்தி வருகிறார்.

இவர் பிரபாகரன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.  தற்பொழுது இவர்கள் இருவரும் தங்களது வாழ்க்கையினை மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர். சோசியல் மீடியாவில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்க கூடியவர் அனிதா. இவர் தற்பொழுது பாலி தீவிற்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்கு அவர் அந்தரத்தில் ஊஞ்சலில் தொங்கும் வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.இதோ அந்த வீடியோ…