நடிகை சங்கீதாவின் மகளா இது?… உங்களுக்கு இவ்ளோ பெரிய மகளா?… வெளியான லேட்டஸ்ட் வீடியோ …

தமிழ் சினிமாவில் எண்ணற்ற பிரபலங்கள் காதல் திருமணம் செய்து கொண்டுள்ளனர். அவர்களில் க்ரிஷ் மற்றும் சங்கீதா தம்பதிகளும் ஒருவர். நடிகை சங்கீதா 1998 இல் நடிகர் நெப்போலியன் நடித்த ‘பகவத்சிங்’ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். ஆனால் அதற்கு முன்பாகவே இவர் சில மலையாள திரைப்படங்களில் நடித்துள்ளார்.

   

அதேபோல இவரது கணவர் க்ரிஷ் 2006ல் வெளியான ‘வேட்டையாடு விளையாடு’ படத்தின் மூலம் பாடகராக அறிமுகமானார். இதை தொடர்ந்து இவர் அழகிய அசுரா, சிங்கம் 3 , முப்பரிமாணம் போன்ற பல திரைப்படங்களில் சிறுசிறு வேடத்தில் நடித்துள்ளார். நடிகை சங்கீதாவும் எண்ணற்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.

பாலா இயக்கத்தில் வெளியான ‘பிதாமகன்’ திரைப்படத்தில் இவருடைய கதாபாத்திரம் பெரிதும் பேசப்பட்டது. சமீபத்தில் நடிகை சங்கீதா ‘வாரிசு’ திரைப்படத்தில் நடிகர் விஜயின் அண்ணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. நடிகை சங்கீதா 2009 ல் பின்னணி பாடகர் கிரிஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஷிவியா எனும் ஒரு அழகிய மகள் உள்ளார்.

சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் நடிகை சங்கீதாவின் கணவரான க்ரிஷ். இவர் தற்பொழுது தனது மகளின் க்யூட்டான ரீல்ஸ் வீடியோ ஒன்றை இணையத்தில் பதிவு செய்துள்ளார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் ‘உங்களுக்கு இவ்வளவு பெரிய மகளா?’ என்று கமெண்ட் செய்து வருகின்றனர். இதோ அந்த வைரல் வீடியோ….

 

View this post on Instagram

 

A post shared by SINGER KRISHH (@singerkrish)