புதிய முயற்சியில் களமிறங்கிய  நடிகை ஷாமிலி … இயக்குனர் மணிரத்னம் முதல் திறப்பு விழாவில் பங்கேற்ற முக்கிய பிரபலங்கள்… 

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் அஜித். நடிகர் அஜித் நடிகை ஷாலினியை  2000ல் காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்பொழுது இவர்களுக்கு அனுஷ்கா என்ற மகளும், ஆத்விக் என்ற மகனும் உள்ளனர். நடிகை ஷாலினிக்கு ஒரு தங்கை உள்ளார். அவர் பெயர் ஷாமிலி.

   

இவர் 1990ல் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான ‘அஞ்சலி’ திரைப்படத்தில் மனநலம் குன்றிய குழந்தையாக நடித்து அனைவரையும் அசத்தியவர் பேபி ஷாமிலி. இதற்காக அவருக்கு பல விருதுகள் கிடைத்தது. இதை தொடர்ந்து தமிழில் பல படங்களில் நடித்துள்ளார். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இன்று பல படங்களில் ஹீரோயினாக கலக்கி வருகிறார். இவர் 2016 விக்ரம் பிரபு நடித்த ‘வீரசிவாஜி’ என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார்.

தமிழில் இவருக்கு அதிகமான பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. ஆனால் ஷாமிலி கன்னடம், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் தொடர்ந்து தற்பொழுதும்  நடித்துக் கொண்டு வருகிறார். தற்பொழுது இவர் சினிமாவில் இருந்து விலகி ஓவியக்கலையில் ஆர்வம் கொண்டு ஓவியம் வரைய ஆரம்பித்துவிட்டார். ஷாம்லியின் ஆர்வத்தை கண்டறிந்து அவரை ஊக்கப்படுத்தி வந்தார் அக்கா கணவர் அஜித்.

அவரின் வழிகாட்டுதல் படி, ஓவியம் மற்றும் நாட்டிய கலைகளை ஆர்வத்துடன் கற்கத் தொடங்கினார் ஷாமிலி. குறிப்பாக ஓவிய துறையில் மேதையான ஏ. வி. இளங்கோவின் வழிகாட்டலுடன் ஓவியம் வரைவதில் கவனம் செலுத்தினார். இந்தத் துறையில் இடைவிடாத பயிற்சி, விடாமுயற்சியோடு பல ஓவிய படைப்புகளை உருவாக்கினார் ஷாம்லி. ஷாம்லியின் ஓவியங்களின் தனி சிறப்பு என்றால், அவர் தற்போதைய காலகட்டத்திற்கு ஏற்ற வகையில் வண்ணமயமாகவும். ‌ பெண்களின் சுதந்திரத்தையும் பிரதிபலிக்கும் வகையில் இருந்தது.

இவரது படைப்புகள் ஏற்கனவே கடந்த 2019 ஆம் ஆண்டு பெங்களூரூவிலுள்ள சித்ரகலா பரிஷத் எனும் கலைக்கூடத்தில் கண்காட்சிக்கு வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து 2022 ஆம் ஆண்டில் சென்னையிலுள்ள வெண்பா கேலரி எனும் கலைக்கூடங்களில் இடம்பெற்றது. அதே போல் சமீபத்தில் துபாயில் உள்ள வேர்ல்ட் ஆர்ட் துபாய் எனும் சர்வதேச ஓவிய கலைக் கூடத்திலும் கண்காட்சியாக தன்னுடைய ஓவியங்களை பார்வையாளர்களுக்கு காட்சிப்படுத்தி இருந்தார்.

இந்த நிகழ்ச்சியில் சுமார் 300க்கும் மேற்பட்ட ஓவியர்கள் கலந்து கொண்டு, தங்களின் படைப்புக்களை காட்சி படுத்தியது குறிப்பிடத்தக்கது. இதை தொடர்ந்து தன்னுடைய ஓவிய படைப்புகளை அனைவரும் பார்வையிடும் விதமாகவும், விற்பனை செய்யும் விதமாகவும் ‘ஷீ’ என்கிற ஆர்ட் கேலரி ஒன்றை துவங்கியுள்ளார். இதில் ஷாலினி, அவரின் மகன் ஆத்விக், மகள் அனோஷ்கா உள்ளிட்ட அனைவருமே கலந்து கொண்டனர்.

மேலும் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான், இயக்குநர் மணிரத்னம், சுஹாசினி மணிரத்னம், ஆக்ஷன் கிங் அர்ஜுன் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர். இப்புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாக்கப்பட்டு வருகிறது.