இந்த சிறுவயது புகைப்படத்தில் ஃபுல் மேக்கப்பில் இருக்கும் பிரபல நடிகை யார் தெரியுமா?… தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீங்க…

சமீப காலமாகவே பிரபலங்களின் சிறு வயது புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த வகையில் தற்பொழுது நடிகை ஷிவானியின் சிறுவயது புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது.சின்னத்திரை சீரியல்களில் நடித்து வருபவர் ஷிவானி நாராயணன். மாடலான இவர் பகல்நிலவு சீரியல் மூலம் தமிழில் அறிமுகமானார்.

   

இதையடுத்து கடைக்குட்டி சிங்கம் என்கிற சீரியலில் நடித்தார். இவர் தற்போது ரெட்டை ரோஜா என்கிற சீரியலில் பிஸியாக நடித்து வருகிறார். மேலும் சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்க கூடியவர் ஷிவானி. இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 4 மூலம் ரசிகர்கள் மத்தியில் மூலம் பிரபலமானவர் இளம் நடிகை ஷிவானி.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் நல்ல வரவேற்பை பெற்ற, ஷிவானிக்கு பல படங்களில் நடிக்கும் வாய்ப்பு பிரகாசமாக கிடைக்க தொடங்கியது. சின்னத்திரையில் நுழைந்து தற்பொழுது வெள்ளி திரையில் கலக்கி வருகிறார் நடிகை ஷிவானி. இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் ஆக்டிவாக இருக்கக்கூடிய இவர் தனது ஃபோட்டோ ஷூட் புகைப்படங்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்று வருகிறது.

தற்பொழுது இவர் வெள்ளித்திரையில் விக்ரம், நாய் சேகர் ரிட்டன்ஸ், டிஎஸ்பி போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்போது இவரின் சிறு வயது புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்…