நயன்தாரா – யோகி பாபு வைத்து முழுக்க முழுக்க காமெடியை புகுத்தி செம சூப்பர் டூப்பர் ஹிட் படத்தை கொடுத்தவர் இயக்குனர் நெல்சன் திலிப்குமார். இதற்க்கு முன் ‘வேட்டை மன்னன்’ படத்தை இயக்கினார். ஆனால், அப்படம் பாதியிலேயே நின்றுபோய்விட்டது.அதன்பிறகு டாப் நடிகர்கள் தொடங்கி இளம் நடிகர்கள் பலரும் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் நடிக்க வேண்டும் என ஆர்வம் காட்டினார்கள்.
அடுத்த படமே சிவகார்த்திகேயனுக்கு கதைசொல்லி ‘டாக்டர்’ என்னும் காமெடி திரைப்படத்தை எடுத்து வெற்றி கண்டார். இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று சிறப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது. பின் விஜய்யுடன் கூட்டணி அமைத்து ‘பீஸ்ட்’ படத்தை இயக்கினார். மிகப்பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்ட பீஸ்ட் திரைப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது.
வசூல் ரீதியாகவும் ஓரளவு நல்ல வரவேற்பு இருந்தாலும், விஜய் திரைவாழ்க்கையில் சுறா படத்திற்கு பின் மோசமான விமர்சனங்களை பெற்ற திரைப்படமாக பீஸ்ட் அமைந்தது.
இவர் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து ‘ஜெயிலர்’ படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் மீதி மாபெரும் நம்பிக்கையை ரஜினி ரசிகர்கள் வைத்துள்ளனர்.
இந்நிலையில், இயக்குனர் நெல்சன் திலிப்குமார் தனது மனைவி மற்றும் மகனுடன் எடுத்துக் கொண்ட அழகிய குடும்ப புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.