செல்ல மகளின் பிறந்தநாளை வேற லெவலில் கொண்டாடிய ஸ்ரீதேவி விஜயகுமார்… வெளியான அழகிய புகைப்படங்கள்..!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக பலம் வந்தவர்தான் நடிகை ஸ்ரீதேவி.

   

இவர் குழந்தை நட்சத்திரமாக 1992 ஆம் ஆண்டு ரிக்ஷா மாமா என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.

அந்த திரைப்படத்திற்கு பிறகு ஓரளவு இளமையை எட்டியதும் தேவதையை கண்டேன் மற்றும் தித்திக்குதே உள்ளிட்ட திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்தார்.

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாள உள்ளிட்ட பல தென்னிந்திய மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இவர் விஜயகுமார் மற்றும் மஞ்சுளா தம்பதியினரின் மகள் என்பதை அனைவரும் அறிந்திருப்போம்.

இவருக்கு வனிதா மற்றும் பிரீத்தா விஜயகுமார் என்ற சகோதரிகளும் அருண் விஜய் என்ற சகோதரரும் உள்ளனர்.

இதனிடையே தன்னுடைய அழகால் ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்த இவர் கடந்த 2009 ஆம் ஆண்டு ராகுல் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

தற்போது இவருக்கு ஒரு மகளும் உள்ளார். இதனிடையே இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ஸ்ரீதேவி அடிக்கடி க்யூட்டான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்வது வழக்கம்.

அதன்படி நேற்று அவர் தனது செல்ல மகளின் பிறந்தநாளை கொண்டாடிய நிலையில் அது தொடர்பான புகைப்படங்களை பகிர்ந்து உள்ளார்.

அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.