‘என் இதயம் இதுவரை துடித்ததில்லை’ பாடலுக்கு…. சுடிதாரில் vibe ஆன ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தனம்… இதோ வீடியோ…

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் ஹிட் சீரியலில் ஒன்று ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’. இந்த சீரியல் மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு பெற்று வருகிறது. இந்த சீரியலில் ஸ்டாலின், குமரன், சுஜிதா, வெங்கட் என பல நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். நடிகை சுஜித்ரா ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தொடரில் தனம்  கதாபாத்திரத்தில் தற்பொழுது நடித்துக் கொண்டு வருகிறார்.

   

நடிகை சுஜிதா கேரளாவை சேர்ந்தவர். இவருக்கு ஒரு தங்கையும் அண்ணனும் உள்ளனர். இவர் முதன் முதலில் சினிமா துறையில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். தமிழில் பாக்கியராஜ் நடிப்பில் வெளியான ‘முந்தானை முடிச்சு’ திரைப்படத்தில் கை குழந்தையாக இவர் அறிமுகமானார்.

இதை தொடர்ந்த அவர் பல திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து அசத்தியுள்ளார். குழந்தை நட்சத்திரமாக தனது வாழ்க்கை பயணத்தை தொடங்கிய இவர் தற்பொழுது வரை நடிகையாக ஜொலித்துக் கொண்டுள்ளார்.

சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர்  நடிகை சுஜிதா. இவர் தற்பொழுது  ‘என் இதயம் இதுவரை துடித்ததில்லை’ பாடலுக்கு நடனமாடி, தனது பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள் கூறிய அனைவருக்கும் நன்றி கூறி வீடியோ ஒன்றை இணையத்தில் வெளியிட்டுள்ளார். இதோ அந்த வீடியோ….

 

View this post on Instagram

 

A post shared by Sujithar (@sujithadhanush)