
திரைத்துறையில் உள்ள நடிகர், நடிகைகள் பலர் விஜய் ரசிகர்களாக இருப்பார்கள். குறிப்பாக விஜய்யுடன் நடித்த முன்னணி நடிகைகளே அவருடன் மீண்டும் நடிக்க ஆசைப்படுவார்கள். அந்த வகையில் ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்ற ஜோடி என்றால், அது விஜய்-திரிஷா ஜோடி தான்.
ஆதி, குருவி, திருப்பாச்சி, கில்லி மற்றும் சமீபத்தில் லியோ என்று அவர்கள் இருவரும் இணைந்து நடித்த திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெற்றது. இந்த ஜோடி இணைந்தாலே படம் மெகா ஹிட் தான் என்ற அளவில் பெயர் பெற்றார்கள். இந்நிலையில், இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்கும் கோட் திரைப்படத்தில் திரிஷா ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார்.
அந்தப் பாடல் பிரமாதமாக வந்திருப்பதாக கூறப்பட்டிருக்கிறது. இது குறித்து வலைப்பேச்சு பிஸ்மி தெரிவித்திருப்பதாவது, இயக்குனர் வெங்கட் பிரபு கோட் திரைப்படத்தில் திரிஷா ஆடியிருக்கும் நடனம் நன்றாக வந்திருப்பதால், மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளாராம். எனினும், அவருக்கு அதில் சிறு வருத்தம் இருக்கிறதாம்.
அதாவது, இதற்கு முன்பு, இயக்குனர் வெங்கட் பிரபு தெலுங்கில் நாக சைதன்யாவை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்கியிருந்தார். அந்த படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாட திரிஷாவிடம் கேட்டிருந்தாராம். பெரிய தொகையை சம்பளமாக கொடுப்பதாக கூறியும் அவர் நடனமாட மறுத்துவிட்டாராம். ஆனால் தற்போது விஜய் திரைப்படத்தில் மட்டும் நடிக்க வந்துவிட்டார் என்ற சிறிய வருத்தம் அவருக்கு இருப்பதாக பிஸ்மி கூறியுள்ளார்.