லியோ ஷூட்டிங் எப்படி இருந்தது…? திரிஷா வெளியிட்ட அரிய காணொளி…!

இயக்குனர் லோகேஷ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து கடந்த 19-ஆம் தேதி அன்று வெளியான லியோ திரைப்படத்திற்கு ரசிகர்கள் மிகப்பெரிய அளவில் வரவேற்பு கொடுத்து வருகிறார்கள். அந்த வகையில், கோலிவுட்டிலேயே முதல் தடவையாக ஒரே வாரத்தில் 461 கோடி வசூல் செய்தது லியோ திரைப்படம் தான் என்று கூறப்பட்டிருக்கிறது.

சுமார் 15 வருடங்கள் கழித்து நடிகர் விஜய்யுடன் திரிஷா ஜோடி சேர்ந்திருந்தார். இத்திரைப்படத்தில் இவர்கள் இருவருக்குமான காதல் காட்சிகள் நன்றாக இருந்தாக ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள். இந்நிலையில், லியோ திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் வைத்து எடுத்த வீடியோக்களை திரிஷா தன் வலைதள பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.

   

 

View this post on Instagram

 

A post shared by Trish (@trishakrishnan)