லோ நெக் ட்ரெஸ்ஸில் ஹாட்டான போட்டோஷூட் நடத்திய நடிகை வனிதா விஜயகுமார்… ஷாக்கில் ரசிகர்கள்…

தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழி திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை வனிதா விஜயகுமார்.

   

பிரபல நடிகர் விஜயகுமார் மற்றும் மஞ்சுளா ஆகியோரின் மகள் ஆவார். இவர் தமிழ் சினிமாவில் 1995 இல் வெளியான ‘சந்திரலேகா’ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நட்சத்திரமாக விளங்குகின்றார். இவர்  பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலமாக அதிக அளவில் பேசப்பட்டவர்.

இவர் தொடர்பான எந்த செய்தி வெளிப்பட்டாலும் அந்த செய்தி உடனே வைரலாகி விடுகிறது. தனது சொந்த வாழ்க்கையில் எவ்வளவு பிரச்சனைகள் ஏற்பட்டாலும் தன்னுடைய மகள்களை சொந்தக் காலில் நின்று பார்த்துக் கொண்டு வருகிறார்.

தற்பொழுது மீண்டும் திரையுலகில் கால் பதித்து கலக்கி வருகிறார் நடிகை வனிதா. அந்தவகையில் 80’ஸ் முன்னணி நடிகர் மைக் மோஹனுடன் இணைந்து ‘ஹரா’ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.

தற்பொழுது இவர் நடிப்பில் ஜூலை 21 ஆம் தேதி  ‘அநீதி’ திரைப்படம் ரிலீசாக உள்ளது. இயக்குநர் வசந்த பாலன் இயக்கத்தில், அர்பன் பாய்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி உள்ள படம் அநீதி.

அந்த படத்தில் கதாநாயகனாக அர்ஜுன் தாஸ் நடிக்க, நாயகியாக துஷாரா விஜயன் நடித்திருக்கிறார்.

இவர்களுடன் வனிதா விஜயகுமார், நாடோடிகள் பரணி, பிக் பாஸ் புகழ் சுரேஷ் சக்கரவர்த்தி, அறந்தாங்கி நிஷா, காளி வெங்கட், அர்ஜுன் சிதம்பரம் ஆகியோர் நடித்துள்ளனர்.

சோசியல் மீடியாவில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் நடிகை வனிதா விஜயகுமார். இவர் தற்பொழுது லோ நெக் டிரஸ்ஸில் ரசிகர்களை கவரும் ஹாட்டான புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்துள்ளார்.

இப்புகைப்படங்கள் தற்போது இணையத்தில் அதிகம் வைரலாக்கப்பட்டு வருகிறது.