சினிமாவில் எந்த கதாபாத்திரங்களாக இருந்தாலும் பின்னி பெடலெடுக்கும் நடிகைகள்..

சினிமாவில் நடிக்கும் நடிகர்களுக்கு அதிகமான ரசிகர்கள் இருக்கிறார்கள் ஆனால் அது எல்லாம் தாண்டி ஒரு சில நடிகைகள் அவர்களது நடிப்பால் அதிகமான ரசிகர்களை கொண்டிருக்கும் நடிகைகளை பற்றி இதில் காண்போம்.

1. லட்சுமி:

   

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான முன்னணி நடிகைகளில் ஒருவர்தான் நடிகை லட்சுமி. இவர் எதார்த்தமான நடிப்பார் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றார் . இவர் புரட்சித் தலைவர் புரட்சி கலைஞர் எம்ஜி ஆர் காலகட்டத்தில் இருந்து சினிமாவில் பணியாற்றி வருகிறார். இவர் தமிழ் சினிமாவில் முதல் முதலில் தேசிய விருது வாங்கிய பெண்மணி என்ற பெருமை இவரையே சாரும்.

2.ரேவதி:

80ஸ், 90ஸ் களில் மிகவும் பிரபலமான முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ரேவதி. இவர் தேவர் மகன் திரைப்படத்தின் நடித்து சிறந்த நடிகைக்கான தேசிய விருதை பெற்றுள்ளார். இவர் தமிழ், மலையாளம் , தெலுங்கு, கன்னடம் போன்ற படங்களில் நடித்துள்ளார்.இவர் எல்லா விதமான கதாபாத்திரத்திலும் நடிப்பால் அசத்தக்கூடியவர். மேலும் அந்த காலத்து முன்னணி நடிகர்களுக்கு ஜோடி போட்டு நடித்திருக்கிறார்.

3.ஊர்வசி:

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் நடிகை ஊர்வசி. இவர் நடிகர் பாக்யராஜ் உடன் இணைந்து நடித்த ‘முந்தானை முடிச்சு’ படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகமானார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் கிட்டத்தட்ட 500 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார். இவர் காமெடி கதாபாத்திரம் மற்றும் குணசித்திர நடிப்பு என்று இவருடையத் திறமையால் பின்னி பெடல் எடுக்கக் கூடியவர்.

4.ஜோதிகா:

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் தான் நடிகை ஜோதிகா.இவர் நடிப்பில் வெளிவந்த சந்திரமுகி திரைப்படத்திற்கு பிறகு நடிப்பின் நாயகி, இவரை மிஞ்சும் அளவிற்கு யாரும் இல்லை என்று சொல்லும் படி அப்படி ஒரு நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். இவர் திருமணம் ஆகி இரண்டு குழந்தைக்கு அம்மா ஆன பிறகு கூட ஹீரோயினாக நடித்து வருகிறார்.

5.ஸ்ரீவித்யா:

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான முன்னணி நடிகைகளில் ஒருவர் தான் மறைந்த நடிகை ஸ்ரீவித்யா. இவர் தமிழ், மலையாளம், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் போன்ற மொழி படங்களின் நடித்துள்ளார் சுமார் 800-க்கும் மேற்பட்ட திரைப்படங்களின் நடித்துள்ளார். எந்தவித கதாபாத்திரம் கொடுத்தாலும் நடித்த அசத்தக்கூடியவர்.

6.மனோரம்மா:

தமிழ் சினிமாவில் மிகவும்பிரபலமான முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை மனோரம்மா.இவர் தனது ரசிகர்களால் அன்போடு ‘ஆச்சி’ என அழைக்கப்படுகிறார். இவர் பிரபல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். இவர் 1700 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார். இன்று பார்த்தாலும் இவரது நகைச்சுவை காமெடியானது மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றுள்ளது.

7.ஈஸ்வரி ராவ்:

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகைகளின் ஒருவர் நடிகை ஈஸ்வரி ராவ். இவர் 1997 ஆம் ஆண்டு வெளியான ‘ராமன் அப்துல்லா’ என்ற திரைப்படத்தின் மூலமாக மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றார். இவர் தனது அசாதாரண நடிப்பு திறமையால் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றுள்ளார்.