எம்ஜிஆர், சிவாஜி முதல் ரஜினி வரை… 70 காலகட்டத்தில் தமிழ் சினிமா எப்படி இருக்கும் பாருங்க… இயக்குனர் சித்ரா லக்ஷ்மணன் பகிர்ந்த அன்சீன் புகைப்படங்கள்…

தமிழ் சினிமாவில் 80 மற்றும் 90களில் பிரபலமான நடிகராக வலம் வந்தவர் தான் சித்தா லட்சுமணன். இவர் திரைப்பட பத்திரிகையாளராக தனது வாழ்க்கையை தொடங்கிய நிலையில் இயக்குனர் பாரதிராஜாவுடன் திரைத்துறையில் அறிமுகமானார். பிறகு பல திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்து வந்த இவர் தயாரிப்பாளராகவும் அறிமுகமானார். மேலும் சில படங்களில் இவர் காமெடி கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இப்படி பல புகழ் மிக்க நடிகரான சித்ரா லட்சுமணன் எம்ஜிஆர் மற்றும் சிவாஜி காலத்தில் தமிழ் சினிமா எப்படி இருந்தது என்பது குறித்த சில புகைப்படங்களை பகிர்ந்து உள்ளார்.

   

நடிகர் சிவாஜி கணேசனுக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்ட நிலையில் அவரை கௌரவிக்கும் நிகழ்ச்சியில் அவருடன் சித்ரா லட்சுமணன் மற்றும் பாரதிராஜா ஆகியோர் உடன் இருந்தனர்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக கலக்கி சினிமாவிலும் கால் பதித்த மக்களுக்கு பல தொண்டுகளை செய்த எம்ஜிஆர் ARS Garden திறப்பு விழாவில் அம்பிகா, ராதா மற்றும் சித்ரா லட்சுமணன் உடன் இருந்தனர்.

நடிகர் சிவாஜி கணேசன் நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற பராசக்தி திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது எடுத்த புகைப்படம்.

தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனரான பாரதிராஜாவின் பலரும் பார்க்காத திருமண புகைப்படம்.

பிரபல நடிகையான மனோரமா உடன் சங்கிலி முருகன் மற்றும் அனுராதா எடுத்துக் கொண்ட அழகிய புகைப்படம்.

சிவாஜியின் முதல் மரியாதை திரைப்படத்தின் படபிடிப்பின் போது கதை ஆசிரியர் ஆர். செல்வராஜ், கலை இயக்குனர் கமல சேகர், சித்ரா லக்ஷ்மணன், பாரதிராஜா, அல்லிநகரம் ராஜேந்திரன் ஆகியோர் எடுத்துக்கொண்ட புகைப்படம்.

நடிகர் ரஜினியுடன் ஆஸ்கார் ரவிச்சந்திரன், நாகர்ஜுனா, ஜீஹி சாவ்லா ஆகியோர் எடுத்துக் கொண்ட புகைப்படம்.

முள்ளும் மலரும் திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது இயக்குனர் மகேந்திரனுடன் ரஜினி, நடிகை சோபா, நடிகர் சரத்பாபு ஆகியோர் எடுத்துக்கொண்ட புகைப்படம்.

தமிழ் சினிமாவின் மிகப்பெரிய இசை ஜாம்பவானான இளையராஜா மற்றும் பிரம்மாண்ட இயக்குனரான பாரதிராஜா மற்றும் நடிகர் மணிவண்ணன் ஆகியோர் எடுத்துக்கொண்ட புகைப்படம்

70 மற்றும் 80களில் சினிமாவில் கலக்கிய முன்னணி நடிகரான ரவிச்சந்திரன் படப்பிடிப்பிற்கு தயாராகும்போது எடுக்கப்பட்ட புகைப்படம்.