விவாகரத்திற்கு பிறகு செம ஸ்டைலாக மாறிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த்…. முன்னணி ஹீரோயின்களுக்கே டப் கொடுப்பாங்க போலயே…  லேட்டஸ்ட் கிளிக்ஸ் இதோ…

நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.

தென்னிந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகள்தான் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். இவர் 2012 இல் வெளியான 3 திரைப்படத்தின் மூலம் இயக்குனராக திரையுலகில் அறிமுகமானார். இத்திரைப்படம் தமிழில் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. இதைத்தொடர்ந்து பல மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டது. நடிகர் தனுஷை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தனுஷை விட வயதில் மூத்தவர் தான் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.

   

இத்திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து ஐஸ்வர்யா ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வை ராஜா வை, சினிமா வீரன் போன்ற படங்களை இயக்கியுள்ளார். நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யாவுக்கு யாத்ரா, லிங்கா என்று இரண்டு பிள்ளைகள் உள்ளனர். சமீபத்தில் தனது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பல வருட திருமண பந்தத்தில்  இருந்து விலகி விவாகத்து பெறுவதாக ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மற்றும் தனுஷ் இருவருமே சமூக வலைத்தளத்தில் பதிவு செய்தனர்.

இப்பதிவை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இவர்கள் இருவரும் மகன்களான யாத்ரா மற்றும் லிங்கா இருவரின் சந்தோஷத்திற்காக மட்டும் பள்ளி விழாக்களில் ஒன்றாக கலந்து கொள்வதை வழக்கமாக வைத்துள்ளனர். இந்த புகைப்படங்களும் அவ்வப்பொழுது வெளியாகி வைரலாகி வருகிறது.

தற்பொழுது நடிகர் தனுசை விவாகரத்து செய்த பின்னர் தீவிரமாக உடற்பயிற்சி, ஆன்மீகம் என பிஸியாக உள்ளார். ஐஸ்வர்யா தற்பொழுது ‘லால் சலாம்’ என்ற திரைப்படத்தை இயக்கியும் வருகிறார். சமூகவலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்ட்டிவாக இருக்க கூடியவர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். இவர் அவ்வப்போது தனது கலக்கல் போட்டோஷூட் புகைப்படங்களையும், விடீயோக்களையும் இணையத்தில் பகிர்ந்து வருகிறார்.

அந்தவகையில் தனது பிறந்தநாள் மற்றும் நியூ இயர் ஒன்றாக ஒரே நாளில் கொண்டாடி புகைப்படம் ஒன்றை இணையத்தில் பதிவு செய்துள்ளார் ஐஸ்வர்யா.  இந்த புகைப்படத்தில் அவர் முன்னணி ஹீரோயின்களுக்கு டப் கொடுக்கும் வகையில் மிகவும் அழகாக உள்ளார். இந்த புகைப்படம் தற்போது ரசிகர்களால் வைரலாக்கப்பட்டு வருகிறது.

இதோ அந்த புகைப்படம்….