நடிகர் விஜய் இப்படிபட்டவரா?… ஹிந்தி பிரபல நடிகர் ஷாருக்கானின் ஓபன் டாக்… ஷாக்கான தளபதி ரசிகர்கள்….

தளபதி விஜய் குறித்து நடிகர் ஷாருக்கான் கூறிய தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமாக ஜொலித்துக் கொண்டிருப்பவர் நடிகர் விஜய். இவர் நடிப்பில் தற்போது ‘வாரிசு’ திரைப்படம் ரிலீசுக்கு தயாராகியுள்ளது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் பிரம்மாண்டமாக ஒளிபரப்பப்பட்டது. இந்நிலையில் வாரிசு திரைப்படத்தின் டிரைலரும் வெளியாகி பல மில்லியன் வியூக்களை கடந்து தற்போது சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.

   

நடிகர் விஜயின் ‘வாரிசு’ திரைப்படமும், நடிகர் அஜித்தின் ‘துணிவு’ திரைப்படமும் நேரடியாக பொங்கலுக்கு ரிலீசாகி மோதிக் கொள்ள உள்ளன. தளபதி விஜய்க்கு நடிகர்கள் பலர் ரசிகர்களாக உள்ளனர். அந்த வகையில் தற்பொழுது விஜயின் குணம் பற்றி ஹிந்தி நடிகர் ஷாருக்கான் கூறிய விஷயம் தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதாவது நடிகர் சாருக் கான் அட்லீ இயக்கத்தில் ஜவான் திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது படத்தின் ஷூட்டிங் கிற்காக ஒரு மாதத்திற்கும் மேலாக சென்னையில் வந்து தங்கி இருந்துள்ளார். அப்பொழுது அவர் நடிகர் விஜயை சந்தித்தாராம்.

இந்நிலையில் ரசிகர் ஒருவர் நடிகர் சாருக்கானிடம் ‘விஜய் எப்படி?’ என ட்விட்டரில்  கேள்வி கேட்டுள்ளார். அதற்கு பதில் அளித்த ஷாருக்கான், ‘விஜய் ரொம்ப ஸ்வீட். அமைதியானவர். எனக்கு ஒரு நல்ல டின்னர் கொடுத்தார்’ என்று தெரிவித்துள்ளார். தற்பொழுது நடிகர் சாருக் கானின் இந்த ட்வீட் இணையத்தில் படுவைரலாகி வருகிறது.

வைரலாகும் ட்வீட் இதோ…