பப்ளிசிட்டி தேடுவதில் தலைவரும் சிஷ்யனும் ஒன்றுதான்…. பட ரிலீஸ் ஒட்டி ஆசீர்வாதம் பெற்ற நடிகர்…

இன்றைய சூழ்நிலையில் தமிழில் வெளியாகும் மசாலா படங்களை கிழித்து தொங்கவிட்டு வருபவர் புளூ சட்டை மாறன். கலைப்படங்களை, நல்ல கதையம்சம் கொண்ட படங்களை தவிர மற்ற படங்கள் இவருக்கு பிடிக்காது. அதனால், ரஜினி,  அஜித், விஜய் ஆகியோரின் படங்களை கடுமையாக கிண்டலடித்தும், நக்கலடித்தும் பேசுவார்.இவரது யுடியூப் சேனலுக்கு பல லட்சம் பேர் சப்ஸ்கிரைபர்களாக இருக்கிறார்கள். இவர் பேசுவது பலருக்கும் பிடித்தும் இருக்கிறது.

   

மசாலா திரைப்படங்களில் இருக்கும் அபத்தம், லாஜிக் ஓட்டைகள், தேவையில்லாத பில்டப்புகள் ஆகியவற்றை தனது ஸ்டைலில் நக்கலடித்து பேசுவதுதான் மாறனின் ஸ்டைல்.அதை தொடர்ந்து செய்து வருகிறார். இதனால், ரஜினி, விஜய், அஜித் ஆகியோரின் ரசிகர்களுக்கு மாறனை பிடிக்கவே பிடிக்காது. தொடர்ந்து அவர்கள் புளூசட்டை  மாறனை கடுமையாக திட்டி வருகின்றனர். ஆனாலும், அவர் அடங்கவே இல்லை.

பி.வாசுவின் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் நடித்துள்ள திரைப்படம் சந்திரமுகி 2. இந்த படம் வருகிற 28ம் தேதி வெளியாகவுள்ளது.இதைத்தொடர்ந்து தீவிர ரஜினி ரசிகரான ராகவா லாரன்ஸ் இன்று காலை ரஜினியை அவரின் வீட்டில் சந்தித்தார். மேலும் அவரின் காலில் விழுந்து ஆசியை பெற்றார். இந்த புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்நிலையில், இந்த புகைப்படத்தை தனது டிவிட்டர் பக்கத்தில் புளூசட்டமாறன் பகிர்ந்துள்ளார்.

மேலும், ‘ஒரு மனிதரின் காலில் மற்றவர் விழுவது என்பது அவரின் தனிப்பட்ட செயல். ஆனால், அதையும் புகைப்படம் எடுத்து ஊடகங்களுக்கு அனுப்பி விளம்பரம் செய்கிறார் மினி சூப்பர். இவராவது வீட்டுக்கு உள்ளே போய் காலில் விழுந்து புகைப்படம் எடுத்தார். ஆனால், அவரோ யோகியின் வீட்டு வாசலிலேயே காலில் விழுந்தார். பப்ளிசிட்டி தேடுவதில் தலீவர் எவ்வழியோ தொண்டரும் அவ்வழிதான்’ என நக்கலடித்துள்ளார். இதையடுத்து ரஜினி ரசிகர்கள் வழக்கம்போல் அவரை திட்டி வருகின்றனர்.