இப்படி நடக்கும் என்று நினைத்தேன்… வடிவேல் கூட சேர்ந்து தப்பு…. ஓப்பன் டாக் செய்த நடிகர்….

தமிழ் சினிமாவின் காமெடி நடிகராக நடித்த மக்கள் மனதில் மிகுந்த வரவேற்பு பெற்றவர் நடிகர் முத்துக்காளை.வடிவேலுவுடனான காமெடிகளின் மூலம் இவர் பிரபலமானார். என் புருஷன் குழந்தை மாதிரி திரைபடத்தில் வரும் செத்து செத்து விளையாடுவோமா காமெடியின் மூலம் மக்களை சிரிக்க வைத்தவர்.இவர் வின்னர், சீனா தானா 001, மொழி போன்ற திரைப்படங்களில் பல காமெடிகள் மூலம் மக்களை ஈர்த்தார். இவர் குறிப்பிட்ட அளவு படங்களில் மட்டுமே நடித்துள்ளார்.

   

விஜயகாந்த் நடிப்பில் வெளியான தவசி திரைப்படத்தில் இவரின் காமெடி கலந்த நடிப்பு மிகவும் ரசிக்கும்படி இருக்கும்.இவர் நடிக்கும் படங்களில் இவரின் ஒரு சில காமெடிக்கு ஏற்றார்போல் இசையமைப்பாளர்கள் இசையமைத்து அந்த காமெடிகளின் மூலம் தனி பெயரையும் சம்பாதித்து கொடுத்துள்ளனர். இவர் தற்போது இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் வெளியாகவுள்ள சந்திரமுகி2 திரைப்படத்தில் நடித்துள்ளார்.இவர் ஒரு சண்டை மாஸ்டராம். ஆனால் இவருக்கு அதற்கு தகுந்த மாதிரியான வாய்ப்புகள் கிடைக்காததால் இவர் காமெடியனாக வலம் வந்துள்ளார்.

மேலும் இவர் தனது வாழ்நாளில் ஒருமுறையாவது திரைப்படத்தில் வில்லனாக நடிக்க வேண்டும் என ஆசையில் உள்ளாராம். தான் நடிக்கும் திரைப்படம் வெற்றி பெற வேண்டும் எனவும் நினைப்பாராம்.அ டிப்படையில் இவர் ஸ்டண்ட் தெரிந்தவர் என்பதால் இவருக்கு அதற்கான கதைகளத்தில் நடிக்க மிகவும் விருப்பப்படுவாராம். ஆனால் அதற்கான வாய்ப்பு இன்னும் தனக்கு கிடைக்கவில்லை எனவும் எண்ணி வருத்தமடைந்துள்ளாராம்.

வடிவேலுவுடனான காமெடி காட்சிகளில் இவரை நாம் அதிக அளவு காண முடியும்.வடிவேலுவுடனே துணை கதாபாத்திரத்தில் நடித்ததுதான் தான் செய்த தவறு எனவும் தனக்கென தனி வழியில் சென்றிருந்தால் இன்று அவரைபோல் தானும் உயர்ந்திருக்கலாம் எனவும் சமீபத்தில் அளித்த பேட்டியி ஒன்றில் கூறியுள்ளார்.