
பிரபல தொகுப்பாளினியான பிரியதர்ஷினி, பல வருடங்களாக தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். தொகுப்பாளினியாக மக்கள் மனங்களிடம் இடம் பிடித்த பிரியதர்ஷினி திரைப்படங்களிலும் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். தற்போது, சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் எதிர் நீச்சல் என்ற பிரபல தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
அதன் மூலம் அவருக்கு ரசிகர்களிடைய நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. இந்நிலையில், பிரிய தர்சினிக்கு இன்று 25-ஆவது திருமண நாள். அவர், தன் கணவர் மற்றும் மகனுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை அவரின் தங்கையான டிடி வெளியிட்டுள்ளார். மேலும், தன் சகோதரிக்கு திருமண நாள் வாழ்த்துக்களை கூறியுள்ளார். அதனை பார்த்த ரசிகர்கள் பலரும் பிரிய தர்ஷினிக்கு திருமண நாள் வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள்.