
நடிகர் விஜயகுமாரின் மூத்த மகளான அனிதா, தன் ஐம்பதாவது பிறந்தநாளை தோழிகளோடு வெளிநாட்டில் உற்சாகமாக கொண்டாடிய புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
நடிகர் விஜயகுமார், தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்திருக்கிறார். வெள்ளித்திரை மட்டுமல்லாமல் சின்ன திரையிலும் பல தொடர்களில் நடித்திருக்கிறார். இவருக்கு இரண்டு மனைவிகள். அதில், மூத்த மனைவியின் பிள்ளைகள் தான் அனிதா, கவிதா மற்றும் நடிகர் அருண் விஜய் ஆவர்.
இரண்டாவது மனைவியான நடிகை மஞ்சுளாவிற்கு வனிதா, ப்ரீத்தா மற்றும் ஸ்ரீதேவி ஆகிய மூன்று மகள்கள் இருக்கிறார்கள். இதில், தற்போது வனிதாவை தவிர மற்ற சகோதர சகோதரிகள் அனைவரும் ஒற்றுமையாக இருக்கிறார்கள். மருத்துவராக இருக்கும் விஜயகுமாரின் மூத்த மகளான அனிதா தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார்.
இவருக்கு ஒரு மகளும் ஒரு மகனும் இருக்கிறார்கள். இந்நிலையில், தற்போது இவர் நண்பர்களோடு தன் 50-ஆவது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். அந்த புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது.