
தொகுப்பாளினி டிடி
தமிழ் சினிமாவில் தொகுப்பாளினிகள் என்று நினைத்தாலே முதலில் நம் நினைவுக்கு வருபவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி தான். இவர் 10 ஆண்டுகளுக்கும் மேலாக தொகுப்பாளினியாக முன்னிலையில் உள்ளார். இவரது நிகழ்ச்சி என்றாலே மிகவும் கலகலப்பாக பார்க்கவே ஆர்வமாக இருக்கும்.
மேலும் சாதாரண தொலைக்காட்சி நிகழ்ச்சி, விருது விழா, ஆடியோ வெளியீட்டு விழா என எந்த மேடையாக இருந்தாலும் அழகாகவும், ஜாலியாகவும் நிகழ்ச்சியை கொண்டு செல்வார். இவர் சிறுவயதிலேயே சின்னத்திரைக்குள் நுழைந்து, நளதமயந்தி உள்ளிட்ட படங்களில் சிறுசிறு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இறுதியாக சுந்தர்.சி இயக்கிய காஃபி வித் காதல் என்ற படத்தில் நடித்துள்ளார்.
முதன்முறையாக தனது விவாகரத்து குறித்து டிடி கூறியுள்ளார்.
திருமணம், விவாகரத்து
இவர் தனது நண்பரான ஸ்ரீகாந்த் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்ட நிலையில், சுமூகமாக போய்க்கொண்டிருந்த இவர்களது திருமண வாழ்க்கையில் சில ஆண்டுகளிலேயே பிரச்சனை ஏற்பட்டது. பின்னர் விவாகரத்தும் செய்துவிட்டனர்.
அண்மையில் ஒரு பேட்டியில் திருமணம் பற்றி டிடி பேசியுள்ளதாவது, “10 ஆண்டுகளுக்கு முன்பு வரை திருமணம் பற்றிய என்னுடைய புரிதல் வேறு மாதிரியாக இருந்தது எனவும் இப்போது அது மொத்தமாகவே மாறிவிட்டது எனவும் வெளிப்படையாக கூறியுள்ளார்.
மேலும் திருமணம் செய்துகொள்வது அவரவரின் தனிப்பட்ட விருப்பம். ஆனால் திருமணம் செய்தால் தான் வாழ்க்கை முழுமை பெறும் என்றெல்லாம் ஒன்று கிடையவே கிடையாது. திருமணம் செய்ய வேண்டும் என்ற கட்டாயம் எதுவும் இல்லை.” இவ்வாறு தொகுப்பாளினி டிடி பேசியுள்ளார்.