பிரபல சினிமா நடிகைகளின் உண்மையான பெயர் என்னன்னு தெரியுமா?

சினிமாவில் பொறுத்த வரையில் சென்டிமெண்ட் பார்ப்பது வழக்கம். நடிகர், நடிகைகளுக்கு சரி வர பட வாய்ப்புகள் அமையவில்லை என்றால் அவர்கள் ஜோசியம் பார்த்து பெயரை மாற்றிக்கொண்ட சம்பவங்களும் அதிகளவில் உண்டு. அப்படி சினிமாவிற்காக தன் நிஜப் பெயர்களை மாற்றிக்கொண்ட பிரபல நடிகைகளின் நடிகைகளின் உண்மையான பெயரைப் பற்றி இதில் காண்போம்.

1.ரம்பா:

   

90s களில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் நடிகை ரம்பா. இவர் தமிழில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். இவர் இவரின் உண்மையான பெயர் விஜயலட்சுமி.


2.அஞ்சலி:

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் நடிகை அஞ்சலி இவர் இயக்குனர் ராம் இயக்கிய கற்றது தமிழ் திரைப்படத்தின் மூலம் திரையுரகில் அறிமுகமானார். இவருடைய உண்மையான பெயர் பால திரிபுர சுந்தரி.

3.மீரா ஜாஸ்மின்:

தமிழ் மற்றும் மலையாள திரைப்படத்தில் பல்வேறு முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்த பிரபலமானவர் நடிகை மீரா ஜாஸ்மின். இவர் உண்மையான பெயர் ஜாஸ்மின் மீரா.

4.சுனைனா:

தமிழ் சினிமாவின் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் நடிகை சுனைனா. இவர் காதலில் விழுந்தேன் என்ற படத்தின் மூலமாக திரையுலகில் அறிமுகமானார். இவர் ஜோசியரின் பேச்சைக்கேட்டு தனது பெயரை 2013-ம் ஆண்டு அனுஷா என மாற்றிக்கொண்டார். இந்த பெயர் மாற்றம் அவருக்கு திருப்புமுனையை தராததால், மீண்டும் சுனைனா என்கிற தனது ஒரிஜினல் பெயரை வைத்துக்கொண்டர். தனது பெயரில் ஒரு A மட்டும் கூடுதலாக சேர்த்துக்கொண்டார்.

5.மிர்ணா:

பட்டதாரி ,களவாணி மாப்பிள்ளை போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை மீர்ணா. இவர் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படத்திலும் நடித்துள்ளார். இவரின் உண்மையான பெயர் அதிதி மேனன்.

6.ரம்யா:

நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான படம் ‘குத்து’.இந்த திரைப்படத்தின் மூலம் மிகவும் பிரபலமானவர் நடிகை ரம்யா. அதை தொடர்ந்து வாரணம் ஆயிரம், சிங்கம்புலி போன்ற படங்களில் நடித்துள்ளார். இவருடைய உண்மையான பெயர் திவ்யா ஸ்பந்தனா.

7.அமலா பால்:

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் நடிகை அமலா பால். இவர் இயக்குனர் சாமி இயக்கிய ‘சிந்து சமவெளி’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அப்படத்தின் இயக்குனர் சொன்னதால் சினிமாவுக்காக தனது பெயரை அனகா என மாற்றிக்கொண்டார். அப்படம் பிளாப் ஆனதால் அந்த பெயர் ராசியில்லை என கூறி தனது ஒரிஜினல் பெயரான அமலா பால் என்பதையே மீண்டும் பயன்படுத்த்தினர்