‘டிக் டாக்’ மூலம் பிரபலமாகி சின்னத்திரை மற்றும் வெள்ளி திரையில் நடித்தவர்கள் யார் தெரியுமா?..

டிக் டாக் மூலமாக வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரை போன்ற வாய்ப்பு கிடைத்த நடிகர் மற்றும் வாய்ப்பு கிடைத்த பிரபலங்கள் பற்றி இதில் காண்போம்.

1.மிர்னாலினி ரவி :

   

டிக் டாக் மியூசிக் ஆப் பில் ரீல் செய்து  மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றவர் மிர்னாலினி ரவி . அதன் பிறகு  எம்.ஜிஆர் படத்தின் நடிகையாக  மிர்னாலினி ரவி நடித்துள்ளார்.  அதைத்தொடர்ந்து இவர் தமிழில் தமிழ் ஒரு சில படங்களில் இவர் நடித்துள்ளார்.

2.காயத்ரி ஷான்:

டிக் டாக் மியூசிக் ஆப் பில் ரீல் செய்து  மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றவர் காயத்ரி ஷான். இவரை இவரது ரசிகர்கள் எக்ஸ்பிரஷன் குயின் என்று அழைப்பார்கள் இவர் தனது டிக் டாக் பக்கத்தில் 1. 6 மில்லியனுக்கு அதிகமாகவும் பாலோவர்ஸ் வைத்துள்ளார். இயக்குனர் தியான் ஸ்ரீனிவாசன் இயக்கிய ‘லவ் ஆக்‌ஷன் டிராமா ‘என்ற மலையாளப் படத்தில் நடிகையாக அறிமுகமானார்.  அதன் பிறகு ஒரு சில குறும்படங்களிலும் இவர் நடித்துள்ளார்.

3.ஹேசல் ஷைனி:

டிக் டாக்கில் ஒத்தையடி பாதை என்ற வீடியோவின் மூலம் ஒரே இரவில் மிகவும்  பிரபலமானவர் ஹேசல் ஷைனி . இவர் டிக் டாக்கில் 1.1 மில்லியன் பாலோவர்ஸ் வைத்துள்ளார். இவர் பிரபல இயக்குனர் பிரபு சாலமனின் மகள். ஹேசல் ஷைனி  மீன் அவன் என்ற குறும்படத்திலும் நடித்துள்ளார்.

4.விஷ்ணு உன்னிகிருஷ்ணன்:

டிக் டாக் மூலம் மிகவும் பிரபலமானவர் நடிகர் விஷ்ணு உன்னிகிருஷ்ணன் இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியல் மூலமாக  சின்னத் திரையில் அறிமுகமானார். அதை தொடர்ந்து ஜீ  தமிழ் டிவியில் ஒளிபரப்பான ‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’ என்ற சீரியல் நடித்துள்ளார்.

5.அக்ஷய கமல்:

டிக் டாக் மூலமாக மிகவும் பிரபலமானவர் நடிகை அக்ஷய கமல் இவர் 1.1 மில்லியன் வைத்துள்ளார். விஜய் டிவி ஒளிபரப்பான ‘ராஜா ராணி’ சீரியல் மூலமாக சின்னத்திரையில் அறிமுகமானார். அதை தொடர்ந்து இவர் குறும்படங்களிலும் நடித்து வந்தார். 2019 ஆம் ஆண்டில் ஒளிபரப்பான ‘இரட்டை ரோஜா’ சீரியலில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

6.கேப்ரியல்லா செல்லஸ்:

டிக் டாக் மியூசிக் ஆப் பில் ரீல் செய்து மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றவர்.கேப்ரியல்லா செல்லஸ் இப்போது சன் டிவியின் சூப்பர் ஹிட் ஆக ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் ‘சுந்தரி’ சீரியலில் கதாநாயகியாக நடித்து மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றார்.