பண மோசடியில் சிக்கிய பிக்பாஸ் அபிநய் மனைவி…. 6 பிரிவில் வழக்குப் பதிவு….. தீவிரமாக தேடலில் போலீசார்…!!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் தமிழ் சீசன் 5ல் ஒரு போட்டியாளராக பங்கேற்றவர் மற்றும் பிரபல நடிகருமான ஜெமினி கணேசனின் பேரன் அபிநய். இவர் தமிழில் சில திரைப்படங்களில் சில துணை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர் பிரபல நடிகரின் பேரனாக இருப்பினும் இவருக்கு சினிமாவில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

   

எனவே இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இவர் மனைவி அபர்ணா மற்றும் இருவருக்கும் ஒரு மகன் உள்ளார்.‌  இந்நிலையில் தற்போது அபிநய்   மனைவி மோசடி வழக்கில் சிக்கி உள்ளதாக தகவல் வெளியாகி பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விசாரித்தபோது இவர் மருத்துவக் கல்லூரியில் சீட்டு வாங்கித் தருவதாக ஏமாற்றியதாக கூறப்படுகிறது.  இந்நிலையில் தலைமறைவாக இருக்கும் அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.  இந்த விவகாரம் தமிழ் திரையுலகினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

சென்னை மாம்பலம் பகுதி ஆற்காட்டை சேர்ந்தவர் மஞ்சு, இவரிடம் நான் ஏமாற்றியதாக கூறப்படுகிறது,  இவர் ஆடை வடிவமைப்பாளர், சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையை சேர்ந்த பிரபலங்கள் பலருக்கு  ஆடைவடிவமைப்பாளராக  இருப்பது மட்டுமின்றி, அபிநயின் மனைவி அபர்ணா நடத்தி வரும் ஜவுளி நிறுவனத்திற்கும் ஆடை வடிவமைப்பாளராக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடதக்கது .