‘இந்த ஹிந்தி போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா ‘… ராஜஸ்தானில் ஹிந்தி பேசுபவரையே அசர வைத்த பிக்பாஸ் அனிதா…

விஜய் தொலைக்காட்சியில் கடந்த 6 ஆண்டுகளாக ஒளிபரப்பாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்ற நிகழ்ச்சி  பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியின் 4வது சீசனில் 16 போட்டியாளர்களுள் ஒருவராக கலந்துகொண்டவர் செய்தி வாசிப்பாளர் அனிதா சம்பத்.  இவர் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த சில நாட்களிலேயே சுரேஷ் சக்கரவர்த்தியுடன் வாக்குவாதம், சண்டை என சர்ச்சையில் சிக்கினார்.

   

தொலைக்காட்சியில் செய்திவாசிப்பாளராக அறியப்பட்ட அனிதா சம்பத் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மிகப் பிரபலமானார். ஆரம்பத்தில் அனிதாவிற்கு சப்போர்ட் செய்த பலரும் நாட்கள் செல்ல, செல்ல அவரை சோசியல் மீடியாவில் விமர்சிக்க ஆரம்பித்தனர். அப்படி ஒவ்வொரு முறை மீம்ஸ், ட்ரோல் என அனிதாவை விமர்சித்த அனைவருக்கும் நெத்தியடி பதிலடி கொடுத்து வந்தார் காதல் கணவர் பிரபா.

கிட்டதட்ட 80 நாட்களுக்கு மேல் பிக்பாஸ் வீட்டிற்குள் இருந்த அனிதாவும், தன்னுடைய கணவன் பிரபாவைப் பற்றியும், தங்களுக்கிடையேயான காதல் பற்றியும் பேசாத நாளே கிடையாது. சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் அனிதா சம்பத். இவர் அவ்வப்பொழுது தனது வீடியோக்களையும், புகைப்படங்களையும் இணையத்தில் பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

இவர் சமீபகாலமாக மாலத்தீவுக்கு தனது கணவருடன் சென்ற சுற்றுலா புகைப்படங்களையும், வீடியோக்களையும் இணையத்தில் பதிவு செய்து வந்தார்.சென்றுள்ளார். இவர் தற்பொழுது ராஜஸ்தானுக்கு சென்றுள்ளார். அங்கு  டீ விற்பவரிடம் தனக்கு தெரிந்த ஹிந்தியில் பேசி அவரை குழப்பியுள்ளார். தற்பொழுது இந்த வீடியோ இணையத்தில் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்து வருகிறது . இதோ அந்த வைரல் வீடியோ…