திருமண கோலத்தில் பிக் பாஸ் போட்டியாலர் ஷிவானி…. வைரலாகும் வீடியோ…

இன்றைய காலகட்டத்தில் சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு என்று மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு உள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு என்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.  விஜய் டிவியில் சூப்பர் ஹிட் ஒளிபரப்பான சீரியல் ‘பகல் நிலவு’ இந்த சீரியலை இயக்குனர் ரவி பிரியன் இயக்கியுள்ளார். இந்த சீரியலில் முகமது அஜீம்,  ஷிவானி,  ஷர்மிளா,  சிந்து சாம், விக்னேஷ் கார்த்திக்,  சௌந்தர்யா,  சமீரா போன்ற பல பிரபலங்கள் இந்த சீரியலில் நடித்துள்ளனர். இந்த சீரியலில் சினேகா என்ற கதாபாத்திரத்தில் நடித்த மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றவர் நடிகை ஷிவானி.

   

இவர் விருதுநகரைச் சேர்ந்தவர்.  இதுவே இவரின் முதல் சின்னத்திரை சீரியலாகும். அதை தொடர்ந்து  சரவணன் மீனாட்சி 3,  ராஜா ராணி சீசன் 1,  கடை குட்டி சிங்கம் போன்ற பல சீரியல்களின் நடித்துள்ளார். நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 4 போட்டியாளராகவும் போட்டியாளராக கலந்து கொண்டார். அதை தொடர்ந்து இவர்  சின்னத்திரை மட்டுமல்லாமல் வெள்ளித்திரையிலும் நடித்துள்ளார்.விக்ரம்,  வீட்டில் விசேஷம்,  டிஎஸ்பி,  நாய் சேகர் ரிட்டன்,  பம்பர் போன்ற படங்களில் இவர் நடித்துள்ளார்.

இவர் சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் அடிக்கடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவதே வழக்கமாக வைத்துள்ளார். அந்த வகையில் தற்போது பட்டுப்புடவை அணிந்து தங்க நகைகள் நகைகளுடன் திருமண கோலத்தில் இருக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். தற்போது அந்த வீடியோவானது இணையத்தில் வைரலாகி வருகிறது.