மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் அம்மாவை பார்த்துள்ளீர்களா… வைரலாகும் புகைப்படம் இதோ…

70 s களில்  ரசிகர்களின் கனவு  நாயகியாக வலம் வந்தவர் நடிகை ஸ்ரீதேவி. இவர் விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்தவர்.1969 ஆம் ஆண்டு ‘துணைவன்’ என்ற படத்தின்  குழந்தை நட்சத்திரமாக  திரையுலகில் அறிமுகமாகினார்.இப்படத்தில் முருகன் வேடமிட்டு நடித்து ரசிகர் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றார். இதைத் தொடர்ந்து இவர் பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.1976 ஆம் ஆண்டு கே பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான ‘மூன்று முடிச்சு’படத்தில்  கதாநாயகியாக புது அவதாரம் எடுத்தார்.

   

இதைத்தொடர்ந்து இவர் பாரதிராஜாவின் ’16 வயதினிலே’ படத்தில் மயில் என்ற கதாபாத்திரத்தில் நடித்து தனக்கான ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார்.  தமிழ் தெலுங்கு, மலையாளம்,கன்னடம் ,இந்தி  என  பல மொழிகளின் நடித்து மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பையும் பெற்றுள்ளார்.நடிகை ஸ்ரீதேவி  பிரபல முன்னணி நடிகர்களான  ரஜினி மற்றும் கமலுடன் தமிழ் திரையுலகில் அதிகமான படங்களில்  நடித்து தமிழ் திரையுலகில் தனக்கான முத்திரையை பதித்தார்.இதை தொடர்ந்து  பாலிவுட் படங்கள் நடிப்பதில்  மிகவும் கவனம் செலுத்தி வந்தார். 1980களில்  இந்தி  படங்களின் நடித்து ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார்.

இவர் ராஜேஷ் கன்னா, தர்மேந்திரா. மிதுன் சக்கரவர்த்தி ,அமிதாப்பச்சன் ,ரிஷி கபூர், அனில் கபூர், சல்மான் கான், சஞ்சய் தத் ,என பிரபல பாலிவுட் நடிகர்களுடன்  ஜோடியாக நடித்துள்ளார்.நடிகை ஸ்ரீதேவி பாலிவுட் திரையுலகின் பெண் சூப்பர் ஸ்டார் என்ற பெருமை கொண்டவர்.இவர் 300 படங்கள் நடித்துள்ளார்.நடிகை ஸ்ரீதேவி திரைப்பட  தயாரிப்பாளரான போனி கபூர் என்பவரை 1996 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு ஜான்வி மற்றும் குஷி என்ற இரண்டு மகள்கள் உள்ளனர்.இவர் 2018 ஆம் ஆண்டு துபாயில் மாரடைப்பு காரணமாக காலமானார்.  இன்று நடிகை ஸ்ரீதேவியின் பிறந்தநாள்  அவரை நினைவு கூறும் வகையில் அவரது மகள் ஜான்விக் கபூர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்ரீதேவி ஷூட்டிங்கில் அவர் அம்மா மடியில் அமர்ந்திருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு உருக்கமாக டேக் செய்துள்ளார். தற்போது இந்த புகைப்படம் ஆனது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

 

 

View this post on Instagram

 

A post shared by Janhvi Kapoor (@janhvikapoor)