
விஜய் தொலைக்காட்சியில் அதிக வரவேற்பை பெற்று பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 7 இறுதி கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு நாளும் விறுவிறுப்பாக போட்டிகள் சென்று கொண்டிருக்கின்றன. இந்நிலையில், நேற்று விசித்திரா வெளியேற்றப்பட்டது பலருக்கும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.
ஏனெனில் மூத்த போட்டியாளராக நன்றாக விளையாடிக் கொண்டிருந்த விசித்திராவிற்கு நிறைய ரசிகர்கள் இருந்தார்கள். எனினும், அவர் எப்படி வெளியேறினார்? என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. மேலும் அடுத்தடுத்து வெளியேறப் போகிறவர்கள் யார்? யார்? இறுதி மேடையில் யார் நிற்க போகிறார்கள்? என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே அதிகரித்துள்ளது.
பலரும் அர்ச்சனா இம்முறை டைட்டிலை வென்று விடுவார் என்று கூறி வருகின்றனர். இந்நிலையில், அர்ச்சனா பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்களின் பட்டியல் இணையத்தில் வெளிவந்திருக்கிறது. அதில் ஆச்சரியப்படும் வகையில் பத்தாம் வகுப்பில் 500 மதிப்பெண்களுக்கு 491 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.
அதேபோன்று 12 ஆம் வகுப்பில் அறிவியல் பாடப் பிரிவை தேர்ந்தெடுத்து படித்து அதில் 1200 மதிப்பெண்களுக்கு 1005 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். தற்போது இவரின் மதிப்பெண் பட்டியல்கள் இணையதளங்களில் வைரலாகி கொண்டிருக்கிறது.