பிக் பாஸ் டைட்டில் வின்னர் அசீம் தனது மகனை…. வெற்றிக் கோப்பையுடன் சந்தித்த அழகிய தருணம்…. வைரலாகும் புகைப்படம் இதோ…

பிக் பாஸ் சீசன் 6 டைட்டில் வின்னரான அசிம் தனது மகனை சந்தித்தபோது எடுத்த புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் பிரம்மாண்டமாக  அக்டோபர் 9ஆம் தேதி தொடங்கப்பட்ட பிக் பாஸ் சீசன்6 நிகழ்ச்சி தற்பொழுது வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. இந்நிகழ்ச்சியில் மொத்தம் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர் .இவர்களில் மூன்று போட்டியாளர்கள் மட்டுமே இறுதிப்போட்டிக்கு முன்னேறி இருந்தனர். மீதமுள்ள 18 போட்டியாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் முன்னிலையில் பிக் பாஸ் பினாலே நிகழ்ச்சியும் நடந்து முடிந்துள்ளது.

   

இதில் மூன்றாவது இடத்தை சிவின் பிடித்தார்.இதை தொடர்ந்து விக்ரமன் மற்றும் அசீம் இருவரில் யார் வெற்றி பெறுவார் என ஆவலுடன் ரசிகர்கள் எதிர்பார்த்திருக்கும் பொழுது அஸீமின் கையை உயர்த்தி அவரை டைட்டில் வின்னராக அறிவித்தார் கமல். இதை தொடர்ந்து ரசிகர்கள் மற்றும் குடும்பத்தினர் தங்கள் பாராட்டுக்களை தெரிவித்தனர்.

பிக் பாஸ் டைட்டிலை வென்ற அஸீமுக்கு 50 லட்சம் பணம் மற்றும் விலையுயர்ந்த கார் ஒன்றும் பரிசாக அளிக்கப்பட்டது. தற்பொழுது  பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்த கையோடு வெற்றிக் கோப்பையுடன் மற்றும் பரிசு பணத்துடன் அசிம் தனது மகனை சந்தித்துள்ளார்.

அப்பொழுது எடுக்கப்பட்ட அழகான புகைப்படத்தை தனது இணையதள பக்கத்தில் பதிவு செய்துள்ளார் அசீம். தற்பொழுது இந்த புகைப்படம் இணையத்தில் படுவைரலாகி வருகிறது.

வைரலாகும் அந்த புகைப்படம் இதோ…

 

View this post on Instagram

 

A post shared by MOHAMED AZEEM (@actor_azeem)