
தளபதி விஜய் அரசியலில் களமிறங்கியிருப்பது பற்றி பலரும் பலவிதமாக கருத்து கூறி வருகிறார்கள். அந்த வகையில் வலைப்பேச்சு பிஸ்மி இது குறித்து கூறியிருப்பதாவது, விஜய்க்கு GOAT திரைப்படத்திற்கு 200 கோடி ரூபாய் சம்பளம். அதன்பிறகு, அவரின் சம்பளம் அடுத்தடுத்த படத்திற்கு 220 கோடி மற்றும் 250 கோடியாக அதிகரிக்கும்.
அதிலும், சமீபத்தில் விஜய்யிடம் பேசிய தெலுங்கு தயாரிப்பு நிறுவனத்திடம் அவர் 300 கோடி ரூபாய் சம்பளம் கேட்டதாக கூறப்படுகிறது. வருடத்திற்கு விஜய் இரண்டு திரைப்படங்களில் நடிக்கிறார். எனவே, அவருக்கு ஐநூறு கோடி ரூபாய் வருட வருமானமாக கிடைக்கிறது. இந்த நிலையில் இரண்டு வருடங்கள் அவர் சினிமாவில் நடிக்க மாட்டார்.
எனவே, அவருக்கு ஆயிரம் கோடி ரூபாய் கிடைக்காமல் போகிறது. ஒரு நபர் ஆயிரம் கோடி ரூபாயை விட்டுவிட்டு மக்களுக்கு சேவை செய்ய அரசியலுக்கு வருகிறார் என்றால் அவரை நம்ப முடியாது. மிகப்பெரிய லென்ஸ் வைத்து தான் நாம் அவரை கவனிக்க வேண்டும். அதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள்? என்ன நடக்கிறது? என்பதை நாம் உற்று நோக்க வேண்டும் என்று பிஸ்மி கூறியிருக்கிறார்.