உலகமகா நடிப்புடா சாமி… சாவுகாசமா வந்து அழுறாங்க… முன்னணி நடிகர்களுக்கு சவுக்கடி கொடுத்த ப்ளூ சட்டை…!

முன்னணி நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் அவர்கள் உடல் நலக்குறைவால் கடந்த மாதம் 28ஆம் தேதி அன்று மரணமடைந்தார். தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தொடங்கி அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் அவரின் உடலுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார்கள். திரையுலகை சேர்ந்த நடிகர்கள் நடிகைகள் பலரும் கண்ணீருடன் இறுதி மரியாதை செலுத்தி விட்டு சென்றனர்.

அதன் பிறகு, அவரின் உடல் தீவு திடலுக்கு கொண்டு செல்லப்பட்டபோது வழியெங்கும்  பொதுமக்களும், தொண்டர்களும் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார்கள். எனினும் திரையுலகில் முன்னணி கதாநாயகர்கள் சிலர் வெளிநாடுகளில் படப்பிடிப்பு இருப்பதால் நேரில் வர முடியவில்லை என்று இரங்கல் செய்தி வெளியிட்டிருந்தனர்.

   

தற்போது அவர்கள் விஜயகாந்தின் சமாதிக்கு வந்து கண்ணீருடன் அஞ்சலி செலுத்தியிருக்கிறார்கள். அந்த வகையில், நேற்று நடிகர் கார்த்தியும் இன்று சூர்யாவும் அஞ்சலி செலுத்தியுள்ளனர். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த சூர்யா, கேப்டனுடன் பெரிய அண்ணா திரைப்படத்தில் நடித்த போது நடந்த நிகழ்வுகளை கண்ணீருடன் பகிர்ந்தார்.

அவரை போல் யாருமில்லை என்று அழுதார். அந்த வீடியோக்கள் இணையதளங்களில் வெளியானது. இதனை கிண்டல் செய்யும் விதமாக, திரைப்பட விமர்சகரான ப்ளூ சட்டை மாறன், சென்னை மருந்து கடைகளில் கிளிசரின் வியாபாரம் அதிகரிப்பு என்று புகைப்படம் ஒன்றை பகிர்ந்து அவரை கலாய்த்துள்ளார்.

மேலும், கேப்டனின் இறுதி அஞ்சலியில் நேரடியாக கலந்து கொள்ளாமல், முன்னணி கதாநாயகர்கள் தங்களின் புத்தாண்டு கொண்டாட்டங்களை முடித்துவிட்டு சாவகாசமாக சமாதியில் வந்து அழுது கொண்டிருக்கிறார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.