இவரு பெரிய ரொனால்டோ….! எல்லாரும் பீல் பண்றாங்க…. வைரலாகும் பிரதீப்பிற்கு எதிரான கருத்து…!

விஜய் டிவியின் பிரபல நிகழ்ச்சியான பிக் பாஸ் ஏழாவது சீசனில் ரசிகர்களின் மனங்களில் இடம் பிடித்து நன்றாக விளையாடிக் கொண்டிருந்த போட்டியாளர் பிரதீப்பை சமீபத்தில் ரெக்கார்ட் கொடுத்து வெளியேற்றினர். பிக் பாஸ் வீட்டில் இருந்த போட்டியாளர்கள் இதற்கு ஆதரவு தெரிவித்தாலும், ரசிகர்கள் இதனை கடுமையாக எதிர்த்தனர்.

பலரும் பிரதீப்பிற்கு ஆதரவாக குரல் எழுப்பி வருகிறார்கள். இதற்கு முந்தைய சீசன்களில் கலந்து கொண்ட போட்டியாளர்களும் பிரதீப்பிற்கு ஆதரவாக தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

   

இந்நிலையில், திரைப்படங்களை விமர்சிக்கும் ப்ளூ சட்டை மாறன், தன் X  தளபக்கத்தில், “ஆமா இவரு பெரிய கிறிஸ்டியானோ ரொனால்டோ, ரெட் கார்டு தந்ததால் உலகளாவிய ரசிகர்கள் எல்லாம் சோகத்துல மூழ்கிட்டாங்க” என்று குறிப்பிட்டு புகைப்படம் ஒன்றை பகிர்ந்து இருக்கிறார்.