சும்மா இருக்கிற எனக்கு ஏன்பா ரெட் கார்டு…!! வாரிசு நடிகரை கொச்சையாக விமர்சித்த ப்ளூ சட்டை… கொந்தளிக்கும் ரசிகர்கள்…!!

தமிழ் சினிமாவில் சில நடிகர்கள் படப்பிடிப்பிற்கு சரியாக வராமல் இருந்தாலோ,  படப்பிடிப்பில் கோளாறாக எதையாவது செய்து வைத்தாலோ அவர்களுக்கு தயாரிப்பாளர்கள் சார்பாக புகார் அளிக்கப்பட்டு, தயாரிப்பாளர் சங்கம் அவர்களுக்கு தக்க முடிவெடுக்கும் என்ற கட்டுப்பாடு உள்ளது.

Red card for Dhanush Simbu Vishal Atharva

   

அந்த வகையில் சமீபத்தில் நடிகர் வடிவேலு இந்த பிரச்சனையில் இருந்து மீண்டு வந்து, நடித்து வருகிறார். மேலும் அண்மையில் கூட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் இருந்து புகார் அளிக்கப்பட்டு, நடிகர் தனுஷ், சிம்பு, விஷால், அதர்வா போன்ற நடிகர்களுக்கு ரெட் கார்ட் வழங்கவுள்ளதாக முடிவெடுத்துள்ளார்கள்.

Blue Sattai Maaran Review And Troll Rajinikanth's Jailer Movie

இது சோசியல் மீடியாக்களில் பெரியளவில் பேசப்பட்டு வந்தது. இந்நிலையில், விமர்சகர் ப்ளூ சட்டை என்பவர் சிம்புவே சும்மா இருக்க எனக்கு ஏன்பா ரெட் கார்டு என்று மறைமுகமாக விமர்சித்துள்ளார். இந்த பதிவு ரசிகர்கள் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆனால் இது அதர்வா செய்த தவறு தான் எனவும் தயாரிப்பாளருக்கு கொடுக்க வேண்டிய நஷ்ட ஈடு ரூபாய் 6.10 கோடியை தராததால் தான் இந்த புகார் எழுந்துள்ளது. இவ்வாறு ப்ளூ சட்டை மாறன் விவரித்துள்ளார்.