பாடி பில்டிங் போட்டியில் 300 ஆண்கள்.. நான் மட்டும் தான் பெண்.. மனம் திறந்த பிரியங்கா..!

சமூக வலைதளங்கள் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமடைவது என்பது தற்போது மிகவும் எளிதாகி விட்டது. பலரும் ரில்ஸ்கள் செய்து இணையதளங்களில் பதிவிட்டு பிரபலமாகி விடுகிறார்கள். அப்படி பிரபலமடைபவர்களை இன்ஸ்டாகிராம் தளங்களில் மில்லியன் கணக்கான மக்கள் பின்பற்றுகிறார்கள்.

   

அந்த வகையில் பிரியங்கா என்ற பெண் இன்ஸ்டாகிராம் மூலமாக மக்கள் மத்தியில் பிரபலமானவர். இந்நிலையில், திடீரென்று பாடி பில்டிங்கில் பதக்கம் வென்ற அவரின் புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலானது. அதனைப் பார்த்த ரசிகர்கள், இன்ஸ்டாகிராம் பிரபலம் பிரியங்காவா இது? என்று ஆசிரியப்பட்டனர்.

அவர், பாடிபில்டிங்கில் வெற்றி பெற்ற வீடியோக்களும், புகைப்படங்களும் தான், இணையத்தில் வலம் வந்துகொண்டிருந்தது. அதில், பலரும் பாடிபில்டிங் போன்றே தெரியவில்லையே? திறமையான பல பெண்கள் வாய்ப்பு இல்லாமல் இருக்கும் போது, இந்த மாதிரி பெண்களுக்கு மட்டும் வாய்ப்பு கிடைக்கிறது என்று விமர்சித்தனர்.

இந்நிலையில், தன்னை விமர்சித்தவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பிரியங்கா பேசி இருக்கிறார். அவர் கூறியிருப்பதாவது, இதுபோல் தவறாக பேசுவதால் தான் பெண்கள் இந்த துறைக்கு வர தயங்குகிறார்கள். பாடி பில்டிங்கில் திறமை மிகுந்த பெண்கள் பலர் இருக்கிறார்கள்.

அவர்கள் வெளிவர தயங்குவதற்கு காரணமே இதுபோன்ற தவறாக கமெண்ட் செய்பவர்கள் தான். எனக்கு இது போல் கமெண்ட்களை பார்த்து பழகி விட்டது. இவ்வாறு பேசுவதால் தான் பாடி பில்டிங்கில் என்னோடு சேர்த்து, எட்டு பெண்கள் தான் இருக்கிறார்கள், கடந்த 50 வருடங்களில் என்று கூறி இருக்கிறார். மேலும், அந்த போட்டியில் 300 ஆண்கள் பங்கேற்ற நிலையில், பெண் தான் ஒருவர் மட்டுமே பங்கேற்றதாக கூறியுள்ளார்.