விஜய்க்கு கட்டவுட் வைக்க சொன்ன கேப்டன்… இதெல்லாம் யாரும் செய்யமாட்டாங்க… நெகிழ்ச்சி பின்னணி…!

சினிமா மேற்பார்வையாளரான தனம் என்ற நபர், பேட்டி ஒன்றில் கேப்டன் விஜயகாந்த் குறித்து கூறியுள்ளார். அவர் தெரிவித்திருப்பதாவது, ஜிம் ஒன்றை திறப்பதற்காக கேப்டன் விஜயகாந்த் அவர்களை சந்திக்க சென்றேன். உடனே விஜயகாந்த் சாப்பாடு கொடுத்து, அதன் பின்பு என்ன? என்று கேட்டார்.

நான் வீட்டிலேயே சாப்பிட்டுவிட்டு தான் போனேன். இருந்தாலும், சாப்பாடு கொடுத்தார். ஜிம் திறக்க வேண்டும் என்று கூறியவுடன், சந்தோஷம். அதற்கு நான் என்ன செய்ய வேண்டும்? என்று கேட்டார்.

   
நீங்கள் தான் ஜிம் திறக்க வர வேண்டும் என்று கூறியவுடன், நான் வந்து விடுகிறேன் என்று கூறிவிட்டார். அதன் பிறகு, இளைய தளபதி விஜய்யும் வருகிறார் என்று கூறியவுடன், அப்படியா? தம்பி வருகிறாரா? அப்போது தம்பிக்கு கட்டவுட், போஸ்டர் எல்லாம் அடித்து விடு. எனக்கு எதுவும் செய்ய வேண்டாம். நான் வந்து விடுவேன் என்று கூறினார்.

அப்போது எனக்கு சந்தேகம் வந்துவிட்டது. சார், நீங்கள் தான் திறந்து வைக்க வேண்டும். அவருக்கு மட்டும் போஸ்டர் அடிக்க சொல்கிறீர்களே? என்று கேட்டேன். நான் சொன்ன மாதிரி வந்து விடுவேன். தம்பிக்கு மட்டும் கட் அவுட் வைத்தால் போதும் என்று கூறினார். அப்படி ஒரு மனது யாருக்கு வரும் என்று தெரிவித்துள்ளார்.