மறைந்த கேப்டனுக்கு உயிர் கொடுத்த தளபதி… GOAT படத்தில் இடம்பெறும் நெகிழ்ச்சி காட்சி…!

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி விஜய் நடித்துக் கொண்டிருக்கும், GOAT திரைப்படத்திற்கான படப்பிடிப்பு பணிகள் 50 சதவீதம் நிறைவடைந்திருக்கிறது. படக்குழுவினர் அடுத்தகட்ட படப்பிடிப்பிற்காக வெளிநாடு செல்ல திட்டமிட்டிருப்பதாக கூறப்பட்டிருக்கிறது.

   

இந்நிலையில், ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி GOAT திரைப்படத்தில் கேப்டன் விஜயகாந்த் வருவது போல காண்பிக்க திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதற்காக கேப்டன் விஜயகாந்த் அவர்களின் குடும்பத்தினரிடம் இயக்குனர் வெங்கட் பிரபு அனுமதி வாங்கி இருப்பதாக கூறப்பட்டிருக்கிறது.

விஜய் சினிமாவில் வளர்ந்து பெரிய நடிகராவதற்கு மிக முக்கிய காரணமாக இருந்தவர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள். தற்போது, GOAT திரைப்படத்தில் அவரை காண்பிப்பதன் மூலம் அவரின் ரசிகர்கள் ஒட்டுமொத்த பேரையும் ஈர்க்க வேண்டும் என்பதற்காக மட்டுமல்லாமல் வருங்காலத்தில் கேப்டன் ரசிகர்களின் ஆதரவு தன் அரசியல் வாழ்க்கைக்கு உதவும் என்றும்  விஜய் இந்த முடிவை எடுத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.