
நல்ல நடிகராகவும், ஆளுமை திறன் வாய்ந்த அரசியல்வாதியாகவும் மிகச் சிறந்த மனிதராகவும் வாழ்ந்து வந்த நடிகர் விஜயகாந்த் நேற்று காலையில் உடல் நலக்குறைவு காரணமாக மரணமடைந்தார். அவரின் மறைவு, ரசிகர்களையும், தொண்டர்களையும் மிகப்பெரிய சோகத்தில் ஆழ்த்தி விட்டது.
கேப்டன் விஜயகாந்த் 20 படங்களில் காவல்துறை அதிகாரியாக நடித்து பெயர் பெற்றவர். தமிழ் திரையுலகில் வேறு எந்த நடிகரும் இவரின் அளவிற்கு அதிகமாக காவல்துறை அதிகாரியாக நடித்ததில்லை. இந்நிலையில் பழைய நேர்காணல் ஒன்றில் சேதுபதி ஐபிஎஸ் திரைப்படத்தில் வரும் ஒரு சண்டை காட்சி குறித்து அவர் பேசிய வீடியோ வைரலாகி வருகிறது.
அதில் அவர் தெரிவித்திருப்பதாவது, அந்த திரைப்படத்தில் அலுவலகத்தை விட்டு நான் வெளியே வரும்போது தீவிரவாதிகள் என்னை அடிக்க வருவார்கள். 70 கார்கள் அந்த சண்டை காட்சிக்காக பயன்படுத்தப்பட்டது. அந்த சண்டைக் காட்சியை மிகவும் சிரமப்பட்டு தான் எடுத்தோம்.
18 நாட்களாக தொடர்ந்து ஒவ்வொரு நாளும் இரண்டு மணி நேரங்கள் எடுத்தோம். மழை காரணமாக அவ்வளவு நாட்களாகிவிட்டது. எனினும் கடைசி இரண்டு நாட்கள் மட்டுமே மழை பெய்யாமல் இருந்தது. அப்போது தான் முழுமையாக எடுத்து முடிக்க முடிந்தது. தற்போது வரை நான் நடித்த திரைப்படங்களிலேயே மிகவும் ரிஸ்க் எடுத்து நடித்த சண்டைக்காட்சி அதுதான். மக்கள் மத்தியில் பெரிய அளவில் பெயரும் பெற்றது என்று தெரிவித்திருக்கிறார்.
View this post on Instagram