இயக்குனர் சங்கரின் மகள் திருமணம்.. “கைகுலுக்கி வாழ்த்து சொன்ன சினிமா பிரபலங்கள்”.. வைரல் புகைப்படங்கள்..!!

தமிழ் சினிமாவில் மிகவும் பிரம்மாண்ட இயக்குனர் என்ற பெயரை பெற்றவர் இயக்குனர் சங்கர். தனது படங்களில் எப்போதும் பிரம்மாண்டத்தை வைத்து மக்களை ஆச்சரியப்படுத்தி வருவார்.

   

அதே போல அவரின் மகள் திருமணத்தையும் நிகழ்த்திக் காட்டி இருக்கின்றார். இயக்குனர் சங்கர் ஈஸ்வரி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இந்த தம்பதிகளுக்கு ஐஸ்வர்யா சங்கர், அதிதி சங்கர் என்று இரண்டு மகள்களும், அர்ஜித் சங்கர் என ஒரு மகனும் இருக்கிறார்.

அதிதி சங்கர் டாக்டர் படிப்பை முடித்துவிட்டு விருமன் என்ற திரைப்படத்தின் மூலமாக ஹீரோயினியாக அறிமுகமாகியுள்ளார். இவர் பின்னணி பாடகியாகவும் கலக்கி வருகிறார்.

இவரது மூத்த மகள் ஐஸ்வர்யா ஷங்கருக்கு புதுச்சேரியை சேர்ந்த ரோஹித் என்பவருடன் ஏற்கனவே திருமணம் நடைபெற்றது. ஆனால் இவர்களுக்குள் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக ஆறு மாதத்திற்குள் விவாகரத்து பெற்று பிரிந்தனர்.

தற்போது தருண் என்ற உதவி இயக்குனரை திருமணம் செய்து இருக்கிறார் ஐஸ்வர்யா சங்கர். இந்த திருமணம் மிகவும் பிரம்மாண்டமாக கடந்து திங்கட்கிழமை நடந்து முடிந்தது.

இந்த திருமணத்திற்கு கோலிவுட், பாலிவுட் என பல பிரபலங்கள் வந்து வாழ்த்துக்களை தெரிவித்து சென்றார்கள். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வந்தது.

இந்நிலையில் சங்கரின் மகள் திருமணத்திற்கு வந்த பல பிரபலங்கள் அவருக்கு கை குலுக்கி வாழ்த்துக்களை தெரிவித்த வைரல் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. இந்த புகைப்படங்கள் இதோ..