
பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு மறைந்த நடிகர் கேப்டன் விஜயகாந்த் குறித்து கூறியிருக்கிறார். அவர் தெரிவித்திருப்பதாவது, தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு கடன் பிரச்சனை வந்த போது எந்த நடிகர்களும் தங்கள் சம்பளத்தில் இருந்து கொடுக்க முன்வரவில்லை.
எனவே, அப்போது தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவராக இருந்த கேப்டன் விஜயகாந்த் வெளிநாட்டில் கலை நிகழ்ச்சி நடத்த முடிவெடுத்தார். அப்போது நடிகர்கள் தங்களின் சம்பளத்துக்கு ஏற்றவாறு பணம் கொடுத்தாலே பிரச்சனை தீர்ந்து விடும் என்று பல சர்ச்சைகள் எழுந்தன.
அந்த சமயத்தில் விஜயகாந்த் தனி ஆளாக திறந்த ஆளுமை திறனுடன் அனைத்தையும் நிர்வகித்து அந்த பிரச்சனைகளை தீர்த்து வைத்தார். அப்படிப்பட்ட ஆளுமை திறன் வாய்ந்த ஒரு நடிகர் கர்நாடகாவிலோ அல்லது ஆந்திராவிலோ பிறந்திருந்தால் அவரை தூக்கி வைத்து கொண்டாடி இருப்பார்கள். அவர் மறைந்த பிறகு அனைத்து நடிகர்களும் நடிகைகளும் உச்சத்தில் வைத்து போற்றியிருப்பர் என்று தெரிவித்திருக்கிறார்.