இன்னொரு ஆம்லெட் கேட்டதுக்காக… ரஜினியை கேவலப்படுத்திய நபர்… கொந்தளித்த பிரபலங்கள்…!

பழம்பெரும் நடிகர் குமரிமுத்து பல திரைப்படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து மக்களிடையே பெயர் பெற்றவர். அவரின் தனித்துவமான சிரிப்பு சத்தத்திற்கே பல ரசிகர்கள் உண்டு. பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு குமரிமுத்து பேட்டி ஒன்றில் ரஜினி குறித்து கூறிய  விஷயத்தை பகிர்ந்துள்ளார்.

   

அவர் கூறியிருப்பதாவது, ஏவிஎம் தயாரிப்பில் படக்குழுவினருக்கு சாப்பாடு போடும்போது முதன்மை தொழில்நுட்ப கலைஞர்களுக்கு, நடிகர் நடிகைகளுக்கு, ஜூனியர் ஆர்டிஸ்டிகளுக்கு  என்று தனித்தனியாக பரிமாறும் வழக்கம் இருந்துள்ளது. அந்த சமயத்தில் ரஜினிகாந்த் நான்கு படங்களில் நடித்துவிட்டு ஐந்தாவது படத்தில் நடித்துக் கொண்டிருந்துள்ளார்.

அந்த நான்கு படங்களும் அந்த அளவிற்கு வெற்றி பெறவில்லை. அந்த சமயத்தில் ரஜினிகாந்த் குமரிமுத்து மற்றும் பல நடிகர்கள் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டு கொண்டிருந்துள்ளனர். அப்போது ரஜினிகாந்திற்கு ஒரு ஆம்லெட் வைக்கப்பட்டுள்ளது. அவர் அதனை சாப்பிட்டுக் கொண்டே இன்னொரு ஆம்லெட் கிடைக்குமா? என்று பரிமாறிய பையனிடம் கேட்டுள்ளார்.

அதற்கு அந்த நபர், கோழி இன்னும் முட்டை போடவில்லை என்று திமிராக பதிலளித்துள்ளார். அதனை கேட்டவுடன் அனைவரும் கோபமடைந்துள்ளனர். சாப்பாடு விஷயத்தில் இவ்வளவு மோசமாக நடத்துகிறார்கள் என்று சக நடிகர் நடிகைகளுக்கு பயங்கர கோபம் ஏற்பட்டுள்ளது. ஆனால் ரஜினி எந்தவித பதிலும் பேசாமல் அமைதியாக குனிந்து சாப்பிட தொடங்கி விட்டாராம்.