நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சுவாமிநாதனின் குடும்பத்தை பார்த்துள்ளீர்களா?.. வெளியான குடும்ப புகைப்படங்கள்….

சினிமாவில் நடிக்கும் நடிகை நடிகைகள் பட வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால் சின்னத்திரை சீரியல்களில் நடிப்பார்கள். ஆனால் சமீபகாலமாக சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு நடிகர் மற்றும் நடிகைகள் வந்து கொண்டே இருக்கிறார்கள்.

   

அப்படி சின்னத்திரை நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமடைந்த பல நடிகர் மற்றும் நடிகைகள் வெள்ளித்திரையில் கலக்கிக் கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் விஜய் டிவியில் சூப்பர் ஹிட் ஆக ஒளிபரப்பான ரியாலிட்டி சோக்களில் ஒன்று ‘லொள்ளு சபா’.

இந்நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலம் அடைந்தவர் நடிகர் சுவாமிநாதன். அதன் பிறகு ஆனந்தம், மெட்டி ஒலி ,கோலங்கள் தென்றல், கனா காணும் காலங்கள் போன்ற சீரியலில் நடித்தார்.

அதை தொடர்ந்து ஏ சந்திரசேகரன் இயக்கத்தில் வெளியாகிய நான் சிவப்பு மனிதன் என்ற திரைப்படத்தின் மூலம் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் திரையுலகில் அறிமுகமானார். இவர் தமிழில் அருணாச்சலம்,தோரணை, வேலாயுதம்,

தில்லுமுல்லு, வருத்தப்படாத வாலிபர், சிங்கம், அரண்மனை, ராஜாராணி, மாப்பிள்ளை சிங்கம் , சீமா ராஜா போன்ற பல படங்களில் காமெடி நடிகராக நடித்து மக்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்துள்ளார்.

இவர் தமிழ் மற்றும் மலையாள மொழி படங்களில் நடித்துள்ளார். நடிகர் சுவாமிநாதனுக்கு திருமணமாகி ஒரு மகனும் மற்றும் ஒரு மகளும் உள்ளனர். தற்போது இவரின் குடும்ப புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி உள்ளது.