அப்பா மகள் பாசத்தை வைத்து உருவான திரைப்படம் என்னன்னு தெரியுமா?..

தமிழ் சினிமாவில் ஏராளமான கதை கொண்டு பல படங்கள் வெளியாகியுள்ளனர். அப்படி அப்பா மகள் பாசத்தை பற்றி பல்வெவ்வேறு சூழ்நிலைகளில் அமைந்த படங்கள் பற்றி இதில் காண்போம்.
1.தெய்வத்திருமகள்:

இயக்குனர் ஏ எல் விஜய் இயக்கத்தில் 2011 ஆம் ஆண்டு வெளியான படம் ‘தெய்வத்திருமகள்’. இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜி. வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இப்படத்தில் கிருஷ்ணா என்ற அப்பா கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகர் விக்ரம். நிலா என்ற குழந்தை கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகை சாரா அர்ஜூன்.

   

2.விசுவாசம்:

இயக்குனர் சிவா இயக்கத்தில் 2019 ஆம் ஆண்டு வெளியான படம் ‘விசுவாசம்’ இப்படத்திற்கு டி இமான் இசையமைத்துள்ளார். இப்படத்தில் தூக்குதுரை என்ற அப்பா கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகர் அஜித் குமார். மகள் கதாபாத்திரத்தில் நடிகை அனிக்கா நடித்துள்ளார்.

3.தெறி:

இயக்குனர் அட்லி இயக்கத்தில் 2016 ஆம் ஆண்டு வெளியான படம் ‘தெறி’. இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜி வி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.விஜய் குமார் மற்றும் ஜோசெப் குருவில்லா என்ற அப்பா கதாபாத்திரத்தில் நடிகர் விஜய் நடித்துள்ளார். மகள் கதாபாத்திரத்தில் நடிகை நைனிகா நடித்துள்ளார்.

4.அபியும் நானும்:

இயக்குனர் ராதா மோகன் இயக்கத்தில் 2008 ஆம் ஆண்டு வெளியான படம் ‘அபியும் நானும்’. இப்படத்திற்கு இசையமைப்பாளர் வித்யாசாகர் இசையமைத்துள்ளார். இப்படத்தில்ரகுராமன் என்ற அப்பா கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகர் பிரகாஷ்ராஜ். அபி என்ற மகள் கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகை திரிஷா.

5.என்னை அறிந்தால்:

இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் 2015 ஆம் ஆண்டு வெளியான படம் ‘என்னை அறிந்தால்’. இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜயராஜ் இசையமைத்துள்ளார். சக்திவேல் என்ற அப்பா கதாபாத்திரத்தில் நடிகர் அஜித்குமார். மகள் கதாபாத்திரத்தில் நடிகை அனிக்கா நடித்துள்ளார்.

6.கனா:

இயக்குனர் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் 2018 ஆம் ஆண்டு வெளியான படம் ‘கனா’. இப்படத்திற்கு இசையமைப்பாளர் திபு நினான் தாமஸ் இசையமைத்துள்ளார். முருகேசன் என்ற அப்பா கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகர் சத்தியராஜ். கௌசல்யா என்ற மகள் கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.

7.தங்க மீன்கள்:

இயக்குனர் ராம் இயக்கத்தில் 2013 ஆம் ஆண்டு வெளியான படம் ‘தங்க மீன்கள்’ இப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். கல்யாணசுந்தரம் என்ற அப்பா கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகர் ராம். செல்லமா என்ற மகள் கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகை சாதனா.

8.ராஜா ராணி:

இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் 2013 ஆம் ஆண்டு வெளியான படம் ‘ராஜா ராணி’ இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜி வி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இப்படத்தில் ஜேம்ஸ் என்ற அப்பா கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகர் சத்தியராஜ். ரெஜினா என்ற மகள் கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகை நயன்தாரா.