பின்னணி பாடகர் ஹரிஹரனின் குடும்பத்தை பார்த்துள்ளீர்களா?.. வெளியான குடும்ப புகைப்படங்கள்…

இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் கே பாலச்சந்திரன் தயாரிப்பில் 1992 ஆம் ஆண்டு வெளியான படம் ‘ரோஜா’. இப்படத்தில் அரவிந்த் சிவசாமி, மதுபாலா, பங்கஜ் கபூர், நாசர், ஜனகராஜ் போன்ற பல பிரபலங்கள் படத்தில் நடித்துள்ளனர்.

   

இப்படத்திற்கு இசையமைப்பாளார் ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளா.ர் இப்படத்தில் வரும் ‘தமிழா தமிழா’ பாடலை பாடி பாடராக தமிழ் திரையுலகில் அறிமுகமானவர்பாடகர் ஹரிஹரன்.
இப்பாடல் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றது.

இவர் மும்பையை சேர்ந்தவர். இவர் தந்தை எச்ஏஎஸ் மணி எஸ் எஸ் மணி இவர் ஒரு இசைக்கலைஞர். தாய் அலமேலு மணி ஒரு கர்நாடக பாடகர். இவர் மாட்டுங்காவிலுள்ள டான் போஸ்கோ பள்ளியில் பள்ளி படிப்பை முடித்தார்.

அதன் பிறகு மும்பையிலுள்ள SIES கலை, அறிவியல் மற்றும் வணிகக் கல்லூரி பட்ட படிப்பை படித்தார். ஐவர் முதலில் கச்சேரி சர்க்யூட் செய்தார் அதன் பிறகு தொலைக்காட்சி தொடர்களின் அறிமுக பாடல்களை பாடினார்.

அதைத் தொடர்ந்து 1978 ஆம் ஆண்டு வெளியான திரைப்படத்தில் ‘காமன்’ என்ற படத்தில் “அஜீப் சா நேஹா முஜ் பர் குசார் கயா யாரோன்” பாடலை பாடினார்.இப்பாடலானது மிகவும் ஹிட் ஆனது. இவர் தமிழில் ஜீன்ஸ் , இந்தியன் ,

முதல்வன் , தால் , ரங்கீலா , இந்திரா , இருவர் , அன்பே ஆருயிரே , கண்களால் கைத்து செய் , சிவாஜி , அலைபாயுதே , கன்னத்தில் முத்தமிட்டால் , குரு போன்ற பல படங்களில் பாடியுள்ளார்.

இவர் சுமார் 500க்கும் மேற்பட்ட தமிழ் பாடல்களும் 200க்கும் மேற்பட்ட ஹிந்தி பாடல்களையும் பாடியுள்ளார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், மராத்தி, பெங்காலி, ஒடியா, சிங்களம் , போஜ்புரி போன்ற மொழி பாடல்களை பாடியுள்ளார்.

பாடகர் ஹரிஹரன் லலிதா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு கரண் மற்றும் அக்ஷய் என்ற இரண்டு மகன்களும், லாவண்யா என்ற மகளும் உள்ளார். தற்போது இவரின் குடும்ப புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளது.