பாரிஸ் வீதிகளில் வளைத்து வளைத்து போட்டோஷூட் நடத்திய ‘குக் வித் கோமாளி’ பவித்ரா… வெளியான லேட்டஸ்ட் புகைப்படங்கள்…

விஜய் தொலைக்காட்சியில் எத்தனையோ ரியாலிட்டி ஷோக்கள் வந்தாலும் ஒரு சில நிகழ்ச்சிகள் மக்களின் பேராதரவை பெற்று விடுகிறது. அந்த வகையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கென்று ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 4 வது சீசனில் கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் பவித்ரா.

   

தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஷோக்களில் இந்த நிகழ்ச்சி டாப் லிஸ்ட்டில் உள்ளது.  நடிகை பவித்ரா லட்சுமி ஆரம்பத்தில் குறும்படம் மூலமாக மீடியா துறைக்கு அறிமுகமானார். மேலும் மலையாளத்தில் உல்லாசம் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். இவர் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மானாட மயிலாட என்ற நடன நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமல்லாமல் இவர் இரட்டை வால் குருவி என்ற சீரியலிலும் நடித்து இருக்கிறார் இது சீரியலில் தான் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கு பெற்று வரும் அஸ்வினும் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது இரட்டைவால் குருவி சீரியலை தொடர்ந்து நினைக்கத் தெரிந்த மனமே என்ற சீரியலில் கூட நடித்திருக்கிறார் பவித்ரா. ஆனால், இவருக்கு மிகப்பெரிய பிரபலத்தை ஏற்படுத்திக் கொடுத்தது என்னவோ குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான்.

 

சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் பவித்ரா. இவர் தற்பொழுது பாரிசிற்கு சுற்றுலா சென்றுள்ளார்.  அங்கு பாரிசின் வீதிகளில் வளைத்து வளைத்து அவர்  எடுத்த போட்டோ சூட் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.